TamilSaaga

என்னங்க இது! ஊறுகாய் கூட கொண்டு போக கூடாதா… விமான நிலையத்தில் வலுக்கும் கட்டுப்பாடுகள்!

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்கள் திரும்பி வெளிநாட்டிற்கு செல்லும் பொழுது குடும்பத்தில் உள்ள தாயோ அல்லது மனைவியோ வெளிநாட்டுக்குச் சென்று வேலை பார்க்கும் கணவனோ அல்லது மகனோ திரும்ப ஊருக்கு வருவதற்கு ஒரு ஆண்டுகளோ இரு ஆண்டுகளோ ஆகும் என்பதற்காக அன்பின் அடையாளமாக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து பேக் செய்வார்கள். அப்படி பேக் செய்யும் பொருட்களின் முக்கியமான ஒன்று ஊறுகாய் ஆகும். ஏனென்றால் அங்கு சாப்பாடு ஆனது நம் ஊர்களில் கிடைக்கும் சாப்பாடு போல கிடைக்காது என்பதால் வீட்டில் செய்து கொடுக்கும் ஊறுகாயை வைத்து எப்படியாவது சாப்பாடை உள்ளே தள்ளும் நண்பர்கள் ஏராளம். இது தவிர நெய் உள்ளிட்ட சில பொருட்களையும் கொண்டு செல்வதுண்டு. இந்நிலையில் வெளிநாட்டவர்கள் கொண்டு செல்லும் சில முக்கியமான பொருட்களுக்கு விமான நிலையம் தடை விதித்துள்ளன. அதற்கு காரணம் எளிதில் தீ விபத்து ஏற்படுமோ என்ற பயம் தான்.

அதிகப்படியான நபர்கள் உட்கார்ந்து செல்லும் விமானத்தில் சிறு தவறு ஏற்பட்டாலும் கூட மொத்த உயிர்களையும் பாதிக்கும் என்பதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செக் இன் செய்து அனுப்பும் வழக்கம் விமான நிலையங்களில் உண்டு. அதில் தவிர்க்கப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று காய்ந்த தேங்காயாகும். காய்ந்த தேங்காய் எனப்படும் கொப்பரை தேங்காயை அதிகப்படியான நபர்கள் எடுத்துச் செல்வதால் எளிதில் தீ விபத்து ஏற்படும் என்பதால் அப்பொருள் அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு விமான நிலையத்தில் தடை செய்யப்படும் செக் இன் பேக்குகளின் சதவிதமானது தற்பொழுது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

அப்படி விமான நிலையத்தில் கொண்டு செல்லக்கூடாத சில பொருட்களை பார்க்கலாம்:

கொப்பரை தேங்காய் ,ஊறுகாய், நெய், பட்டாசுகள் எண்ணெய் சார்ந்த பொருட்கள், பார்ட்டியில் வெடிக்கப்படும் பாப்பர்,பெயிண்ட் ,லைட்டர், பவர் பேங்க்கள், வாசனை திரவியங்கள், ஈ- சிகரெட்டுகள், கற்பூரம்.

எனவே சொந்த ஊரிலிருந்து வெளிநாட்டுக்கு திரும்பும் நண்பர்கள் இதை கருத்தில் கொண்டு பயணம் மேற்கொண்டால் விமான நிலையத்தில் நேர விரயத்தை தடுக்கலாம்.

Related posts