TamilSaaga

சிங்கப்பூரில் எளிதாகும் வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகள் : யாருக்கு ? – முழு விவரம் அளித்த MOH

சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்று காலத்தில் தங்களுடைய உயிரையும் துச்சமென நினைத்து மக்களின் நலனுக்காக போராடும் சுகாதாரப் பணியாளர்கள் இப்போது வெளிநாடுகளுக்கு செல்ல விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அவர்கள் விடுப்பு முடிந்து திரும்பியதும் தங்கள் வேலையைத் தொடரலாம் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இந்த உடனடிச் செயல்பாட்டுடன், அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கான வெளிநாட்டு விடுப்பு விண்ணப்பத்தின் மீதான தடையை சுகாதார அமைச்சகம் (MOH) நீக்கும்” என்று நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19) வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் சுகாதார அமைச்சகம் (MOHH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் பொது சுகாதாரக் குழுக்களின் சார்பு நிறுவனமான MOHH, வெளிநாட்டு பயண வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்வது, அரசாங்கத்தின் நெறிப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் மற்றும் அக்டோபர் 9 அன்று அறிவிக்கப்பட்ட புதிய தடுப்பூசி பயண பாதைகளுடன் (VTL) அவர்களுடைய பயணம் ஒத்துப்போகிறது என்பதை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் “அனைத்து வெளிநாட்டு பயணங்களும் MOHன் தற்போதைய பயண ஆலோசனை மற்றும் ICA இணையதளத்தில் காணப்படும் தேசிய பயண சுகாதார கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உட்பட்டது” என்று MOHH கூறியுள்ளது.

சுகாதார பணியாளர்கள், “தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களின் விடுப்பு விண்ணப்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்க VTL-ல் பயண பாதை மூலம் பயணம் செய்ய வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்.” வெளிநாடுகளில் இருந்து திரும்பும் சுகாதாரப் பணியாளர்களுக்கான அனைத்து கூடுதல் சோதனைத் தேவைகளையும் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பை வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் பெருந்தொற்று வழக்குகள் சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளன, இவை சிங்கப்பூரின் சுகாதார அமைப்பில் கணிசமான அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சுகாதாரப் பணியாளர்களும் தாங்கள் அதிக பணிச்சுமையை கையாள பல சவால்களை எதிர்கொள்வதாகக் கூறினர்.

Related posts