TamilSaaga

“மீண்டும் சிங்கப்பூரில் 4000ஐ நெருங்கியது ஒரு நாள் தொற்று” – Dormitoryயில் 501 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19) மதியம் நிலவரப்படி 3,994 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் வைரஸ் காரணமாக மேலும் ஏழு பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இது திங்களன்று பதிவான 2,553 புதிய வழக்குகளிலிருந்து மிக அதிக அதிகரிப்பு ஆகும். கடந்த நான்கு நாட்களில் புதிய தொற்றுகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை. “நாட்டில் பதிவாகும் வழக்குகளில் இன்று வழக்கம் போல் வார இறுதி அதிகரிப்பு உள்ளது,” என்று சுகாதார அமைச்சகம் நேற்று (MOH) கூறியது குறிப்பிடத்தக்கது.

“இது ஒரு தற்காலிக அதிகரிப்பா அல்லது இன்னும் அதிகமா என்பதைத் தீர்மானிக்க அடுத்த சில நாட்களுக்கு வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்” என்றும் அமைச்சகம் தெரிவித்தது. “இருப்பினும், கடந்த வாரத்தில், அனைத்து மால்களிலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் அதிக மக்கள் கூட்டம், மற்றும் பொதுப் போக்குவரத்து ரைடர்ஷிப்பில் சிறிதளவு அதிகரிப்பு உள்ளிட்ட செயல்பாட்டு நிலைகள் அதிகரிப்பதை நாங்கள் கவனித்தோம்,” என்று MOH கூறியது.

புதிய வழக்குகளில், 3,981 உள்நாட்டில் பரவியுள்ளது இதில் சமூகத்தில் 3,480 நோய்த்தொற்றுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர் விடுதிகளில் 501 உள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 13 பேருக்கு தொற்று இரவு வெளியிட்ட செய்தியில் ஊடங்களுக்கு அறிவித்தது சுகாதார அமைச்சகம். 57 மற்றும் 90 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை. ஒருவருக்கு ஓரளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்றும் மூன்று பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 246 ஆக உயர்ந்துள்ளது.

Related posts