TamilSaaga

சிங்கப்பூரில் சந்தேகத்திற்கிடமான சொத்து வாங்குபவர்.. புகார் அளிக்காத ஏஜென்ட் – SPF அதிரடி நடிவடிக்கை

சிங்கப்பூரில் சொத்து வாங்குபவரின் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையைப் பற்றி புகாரளிக்கத் தவறியதற்காக ரியல் எஸ்டேட் முகவர் மீது அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது வாடிக்கையாளர் கெய்லாங்கில் சட்டவிரோத சூதாட்ட அரங்குகளை நடத்துவதாக கூறப்பட்டதை அறிந்தும், ஒரு ரியல் எஸ்டேட் முகவர் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான சொத்து பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்கவில்லை.

அவர் மீது இன்று (புதன்கிழமை) (அக். 20) குற்றம் சாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், வாங்குபவர் விடுவிக்கப்படாத திவாலானவர் எனவும், இணை வாங்குபவர் 21 வயதிற்குட்பட்டவர் என்பதால், ஒரு தனியார் சொத்தை வாங்குவதற்கான விருப்பம் ரத்து செய்யப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது.

குற்றம் சாட்டப்படும் நபர் வாங்குபவருக்கான ரியல் எஸ்டேட் முகவர் என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

வாங்குபவர் ஏஜெண்ட்டிடம் 5 சதவிகித முன்பதிவு கட்டணமான S $ 44,300 ஐ ரொக்கமாகத் தருவதாகச் கூறியுள்ளார். ஏனெனில் அவருக்கு வங்கி கணக்கு இல்லை என்று SPF கூறியுள்ளது.

அந்த இடத்திலேயே வாங்குபவரிடமிருந்து S $ 11,000 வசூலிக்க முகவர் ஒப்புக்கொண்டார், மீதமுள்ள S $ 33,300 அடுத்த நாள் பெற ஒப்புதல் அளித்தார்.

மறுநாள், முகவர் வாங்குபவரின் வீட்டில் இருந்து மீதமுள்ள முன்பதிவு கட்டணத்தில் ரொக்கமாக S $ 32,300 வசூலித்து பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தார்.

பின்னர் முகவர் தனது கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து திட்டமிட்டபடி தனியார் சொத்தின் டெவலப்பரிடம் ஒரு காசோலையை கொடுத்தார்.

இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, வாங்குபவரின் முன்னாள் மனைவி வாங்குபவர் விடுவிக்கப்படாத திவாலானவர் மற்றும் கெய்லாங்கில் சட்டவிரோத சூதாட்ட அரங்குகளை நடத்துபவர் என்று முகவருக்குத் தெரிவித்தார்.

வாங்குவதை செல்லாததாக்கவும், பணத் தொகை திருப்பித் தரவும் அவள் கேட்டாள். இந்த குற்றச்சாட்டு பின்பு பதிவு செய்யப்பட்டு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

Related posts