TamilSaaga

சிங்கப்பூரின் Changi பொது மருத்துவமனை ஊழியருக்கு முதற்கட்ட Delta Variant Positive பரிசோதனை

சிங்கப்பூரில் நேற்று (ஜீன்.24) புதிதாக 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உறுதியானது. இதில் 2 பேருக்கு முந்தைய தொடர்பு ஏதுமில்லாமல் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் 35 வயதுடைய சிங்கப்பூரை சேர்ந்த நபர். Changi பொது மருத்துவமனையில் போர்டராக (Porter) பணிபுரிந்து கொண்டிருந்தவர் எனவும் கோவிட் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்டவர் என்றும் சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.

64413-வது தொற்று பரவிய நபரான இவருக்கு கடந்த ஜீன்.22 அன்று வழக்கமான பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதற்கும் முன்பு ஜீன்.8 ஆம் தேதி பரிசோதனையில் கொரோனா தொற்று முடிவு நெகட்டீவாகவே இருந்துள்ளது.

தற்போது முதற்கட்ட Delta Variant Positive பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில் உறுதிபடுத்தும் பரிசோதனை நடத்தவிருப்பதாக சுகாதார அமைச்சு (MOH) அறிவித்துள்ளது.

Related posts