TamilSaaga

இந்தியர்கள் இனி சிங்கப்பூர் வந்தால்…

நமது சிங்கப்பூர் அரசு வியட்நாம் மற்றும் கிரீஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 4) புதிய தடுப்பூசி போடப்பட்ட பயண பாதைகளை (VTLs) அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மலேசியா, இந்தோனேசியா மற்றும் அண்டை நாடான இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத VTL பயணத்தை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது. இதனால் வரும் மார்ச் 16 முதல், மலேசியாவுக்கான சிங்கப்பூரின் VTL சேவை கோலாலம்பூரை கடந்து பினாங்கு வரை நீடிக்கப்படவுள்ளது. சிங்கப்பூருக்கும் பினாங்குக்கும் இடையே இருமார்கமாக நான்கு தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் குடியிருப்பு ஒன்றில் கொத்து கொத்தாக படையெடுத்த கரப்பான் பூச்சிகள் – “ஐயோ” என்று தெறித்தெடுத்து ஓடிய அக்கம்பக்கத்தினர்

அதேபோல இந்தியாவிற்கான VTL சேவை என்பது சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களைத் தாண்டி இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களையும் உள்ளடக்கும் என்று CAAS தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பயணிகள் சிங்கப்பூர் வந்தால் அவர்கள் VTL மூலம் தனிமைப்படுத்துதல் இல்லாமல் சிங்கப்பூர் வரலாம் என்பது தான் இதன் சிறப்பு அம்சம். “VTLன் கீழ் இந்த புதிய மையங்களில் இருந்து விமானங்களை செயல்படத் திட்டமிடும் விமான நிறுவனங்கள், தங்கள் விமான திட்டங்களை குறித்து CAASக்கு சமர்ப்பிக்கலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதி வைத்திருப்பவர்களில், கட்டுமானம், கப்பல் கட்டும் தளம் மற்றும் Process Sector துறையில் உள்ள மலேசியர் அல்லாத வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் அல்லது தங்குமிடங்களில் தங்கியிருக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் VTLன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் கொள்கை ஒப்புதல் (IPA) வைத்திருப்பவர்கள் பாஸுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சிங்கப்பூரில் இருக்கேன்.. 4 வருஷமா குடும்பத்தை பார்க்கமுடியால : தள்ளிப்போன தமிழக தொழிலாளியின் கனவு – கொஞ்சம் கவனமா இருங்க!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வரும் மார்ச் 27ம் தேதி முதல் அக்டோபர் 30 2022 வரை திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இருமார்கமாக விமானங்களை இயக்கவுள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts