TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “புதிய பாஸ்”.. Apply செய்த உடனே Approval – மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு

SINGAPORE: ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் சைனாடவுன், ஜூரோங் ஈஸ்ட், லிட்டில் இந்தியா மற்றும் கெயிலாங் செராய் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கான புதிய அனுமதிச் சீட்டுக்கான (New Pass) விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) முதல் உடனடியாக அங்கீகரிக்கப்படும் என்று மனித வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

SGWorkPass மொபைல் செயலி மூலம் வெளிநாட்டு ஊழியர் இந்த பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது, வெளியே செல்ல விரும்பும் தேதி மற்றும் செல்ல விரும்பும் இடம் ஆகியவற்றை மட்டும் கொடுத்தால் போதும் என்று MOM தெரிவித்துள்ளது.

“இந்த பாஸ் நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும், ஏறக்குறைய விண்ணப்பித்த உடனே இது அங்கீகரிக்கப்படும்” என்று அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்தார்.

அதேசமயம், சிறப்பு பாஸ் (Special Pass) வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் SGWorkPassக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் MOM தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – கடலூரில் இருந்து கனவுகளுடன் சிங்கப்பூர் வந்த ‘பெரியசாமி ராஜேந்திரன்’… நேற்று கிரேன் விபத்தில் உடல் நசுங்கி பலியான சோகம் – கலங்க வைக்கும் புகைப்படம்

இந்த புதிய பாஸ் வழங்கும் திட்டத்தின் நோக்கம், கோவிட்-19 தடைகளை தளர்த்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் Dormitory-களை விட்டு வெளியே வந்து தங்களுக்கு பிடித்த இடத்திற்கு செல்ல உதவுகிறது.

பிரபலமான இடங்களுக்கான பாஸ் (Popular Places Pass) ஜூன் 10 அன்று அறிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் நான்கு இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருவதை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பாஸ் உருவாக்கப்பட்டுள்ளது என்று MOM தெரிவித்துள்ளது.

எனினும், பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு இப்படியொரு பாஸ் இருப்பது தெரியவில்லை. இதுகுறித்து Straits times கூறுகையில், “தோராயமாக 60 ஊழியர்களில் 6 பேருக்கு மட்டுமே இந்த புதிய பாஸ் குறித்து தெரிந்துள்ளது” என்கிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts