TamilSaaga

“சிங்கப்பூர் வந்து 15 ஆண்டுகளில் இதுவே முதல்முறை” : Gardens by the Bay சென்று மகிழ்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

பல மாத பூட்டுதலுக்கு பிறகு இந்த தொற்று நோயிலிருந்து சற்று விடுபட்டு, உலக அளவில் மக்கள் மெல்ல மெல்ல தங்கள் பணிகளுக்கு திரும்பி வருகின்றனர். சிங்கப்பூரிலும் தங்களது Dormitoryகளில் முடங்கி கிடந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது முன்னோடி திட்டத்தின் கீழ் சமூக வருகைக்கு அனுமதிக்கப்பட்டு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொழிலாளர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள் : “திறக்கப்படும் சிங்கப்பூர் – ஜோஹார் எல்லை”

இந்நிலையில் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் “எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்கு கடந்த நவம்பர் 14ம் தேதி அன்று Gardens by the Bay பகுதியில் உள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்து தங்கள் பொழுதை களித்தனர். இந்த நிகழ்வு சாத்தியமாக உதவிய Serve Our City Singapore நிறுவனத்திற்கு எங்கள் நன்றிகளை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். Hope Initiative Alliance நிறுவனத்தின் துணையுடன் SOCS செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்ட பதிவு

இந்த பிக்னிக்கின் மதிய உணவுக்கு முன் ஃப்ளவர் டோம் மற்றும் கிளவுட் ஃபாரஸ்ட் ஆகியவற்றைப் பார்வையிட்டபோது, Serve Our City Singaporeன் தன்னார்வத் தொண்டர்கள், எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் நண்பர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டிகளாகவும் புகைப்படக் கலைஞர்களாகவும் இருந்தனர் என்பதும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இந்த நிகழ்வில் பங்கேற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் கோவிந்தசாமி ரமேஷ்குமார், “நான் சிங்கப்பூரில் 15 வருடங்களாகப் பணியாற்றியிருக்கிறேன், ஆனால் ஒரு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வது இதுவே முதன்முறை, இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் ACE குழுமத்துடன் இணைந்து பணியாற்றிய எங்கள் கூட்டாளர்களுக்கு நன்றி என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts