TamilSaaga

“இந்தியா முதல் சிங்கப்பூர் வரை” : திறக்கப்படும் VTL சேவை – VTPக்கு “Apply” செய்வது எப்படி? – Detailed Report

நமது சிங்கப்பூர் அரசு இந்த தொற்று நோய் காலத்தில் குடிமக்களை காக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது எல்லைகளை முழுமையாக மூடியது. அதன் பிறகு தடுப்பூசி செயல்பாடுகள் உலக அளவில் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் VTL என்ற சேவையை தொடங்கி, அதன் மூலம் பிற நாடுகளில் இருந்து பயணிகளை தனிமைப்படுத்துதல் இன்றி நாட்டிற்குள் நுழைய அனுமதித்து வருகின்றது சிங்கப்பூர் அரசு. இதுகுறித்து கவனமாக செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் சிவில் விமானபோக்குவரது ஆணையமும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் to திருச்சி – இன்னும் எவ்வளவு நாட்களுக்கான Air India Express டிக்கெட் மீதம் உள்ளது?

இந்நிலையில் இந்த VTL திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 29ம் தேதி முதல் இந்தியாவின் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து தினசரி 6 விமானங்கள் இயக்கப்படவுள்ளது என்று தகவல்கள் அண்மையில் வெளியானது. மேலும் இந்த VTL சேவையில் பயணிக்க இந்தியா உள்பட எல்லா நாடுகளை சேர்ந்த பயணிகளும் VTP எனப்படும் Vaccinated Travel Pass என்ற பாஸ் எடுக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த VTP எனப்படும் பாஸ் எப்படி apply செய்யவேண்டும் என்று பின்வருமாறு காணலாம்.

முதலில் இதுகுறித்து சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை காணலாம், “முதலில் இந்த VTP எடுப்பதற்கு எந்தவித “Quota”வும் கிடையாது. விண்ணப்பிப்பதற்கு முன் உங்கள் பாஸ்போர்ட், தடுப்பூசி சான்று மற்றும் சுய தனிமைபடுத்துதல் முகவரி ஆகியவற்றை தயார் செய்து கொள்ளவும். சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் VTPக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. நில வழி பயணத்திற்கான VTP விண்ணப்பங்கள் திறக்கப்படவில்லை, மேலும் இதற்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.”

VTPக்கு Apply செய்ய..

சிங்கப்பூர் அரசு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறந்து, “Create New VTP Application” என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்னர், உங்கள் பெயர் மற்றும் செயலில் உள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) உருவாக்கப்படும்.

உங்கள் திரையில் காட்டப்படும் OTP மற்றும் Captchaவை உள்ளிடவும்.

உங்கள் பயண விவரங்களைச் சேர்க்கவும், புறப்படும் இடம் மற்றும் பயண தேதியை பதிவிடவும்.

இறுதியாக உங்கள் பாஸ்போர்ட் எண் உட்பட உங்களின் அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் உள்ளிட்டு, பின்னர் ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

மேற்குறிய இந்த முறையில் தான் நீங்கள் VTPக்கு apply செய்யமுடியும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts