TamilSaaga

சிங்கப்பூரில் புதிதாக 1646 பேருக்கு தொற்று : Dormitoryயில் மேலும் 277 புதிய வழக்குகள் – நாட்டில் மேலும் மூவர் பலி

சிங்கப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) நண்பகல் நிலவரப்படி மேலும் 1,650 புதிய பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன, தொடர்ச்சியாக நாளாவது நாளாக 1000ஐ கடக்கிறது தொற்றின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பதிவான 1,646 உள்ளூர் நோய்த்தொற்றுகளில் 1,369 சமூக வழக்குகள் மற்றும் 277 தங்குமிட குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது. புதிய உள்ளூர் வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 391 முதியவர்கள் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.

மேலும் அதிரிச்சி அளிக்கும் விதமாக நாட்டில் மேலும் மூவர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகியுள்ள நிலையில் இதுவரை சிங்கப்பூரில் தொற்று பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனனர் என்று MOH வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் மொத்தம் 84,506 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 1,092 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நன்றாகவும் கண்காணிப்பிலும் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. மொத்தம் 162 தீவிர நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படுகிறது. மேலும் 23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 151 முதியவர்களும் அடங்குவர். மேலும் கடந்த 28 நாட்களில், 98 சதவீத உள்ளூர் வழக்குகள் அறிகுறியற்றவை அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தன என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts