TamilSaaga

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் “ஒத்த செருப்பு” : பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார்? – வெளியான சுவாரசிய தகவல்

திரைப்பட உலகை பொறுத்தவரை தனித்துவமான படங்களின் எண்ணிக்கை என்பது கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. ரொமான்ஸ், ஆக்சன், திரில்லர் மற்றும் நகைச்சுவை என்று கடந்த சில ஆண்டுகளாக மிக குறுகிய வட்டத்திற்குள் இந்திய சினிமா அடங்கி விடுகிறது. ஆனால் வெகு சில இயக்குநர்கள் சினிமாவை அதனுடைய வழக்கமான பாணியில் இருந்து மாற்றி வேறு பாதையில் கூட்டிசெல்கின்றனர் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு நடிகர் பார்த்திபன் அவர்களால் கதை மற்றும் வசனம் எழுதப்பட்டு, இயக்கி, நடித்து, தயாரித்து, விநியோகம் செய்து வெளியான ஒரு One Man ஷோ தான் ஒத்த செருப்பு திரைப்படம். உலக அரங்கில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த படம் பல இன்டர்நேஷனல் விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை ஏற்கனவே பிற மொழிகளிலும் இயக்க முடிவு செய்தார் இயக்குநர் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க பணிகளை நடிகர் பார்த்திபன் அவர்கள் தொடங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஒரு அசத்தல் தகவலாக இந்த படத்தில் பார்த்திபன் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts