TamilSaaga

சிங்கப்பூர் தமிழர்களின் “சூப்பர்” முயற்சி! – தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் தான் கைக்கொடுக்கணும் – மேடையிலேயே அசந்து பேசிய பிரபலம்

முழுக்க முழுக்க சிங்கப்பூர் தமிழர்களின் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சத்யா நல்லையா இசையில், ராகதீபன் மற்றும் ஓவியா உமாபதி பாடல் வரிகளில், சத்யா மற்றும் ரட்சிதா சுரேஷ் குரலில் உருவாகியுள்ள “கருப்பழகி” பாடல் வீடியோ வெளியீடு நிகழ்ச்சி நேற்று (மே.2) சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பாடலின் ஒளிப்பதிவு, கலரிங் மற்றும் படத்தொகுப்பு பணிகளை யுவன் செல்வா செய்துள்ளார்.

கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் மைம் கோபி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “இங்குள்ள ப்ரித்வி உடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் இப்போது இயக்குநர் ஆகிவிட்டார். நிறைய தெளிவானவர். அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. சத்யா மிகமிக நல்ல மனிதன் அவனுக்கு கோபமே வராது அவனுக்குள் நிறைய திறமை இருக்கிறது. அவன் முயற்சிகள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும். அவனின் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சத்யா பார்க்க மிக அழகாக இருக்கிறார். தோற்றம் பார்க்க கவர்ச்சியாக இருக்கிறது. “கருப்பழகி” ஒரு நல்ல முயற்சி. விஷுவல்கள் பார்க்க மிக அழகாக இருந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய ஊழியர்களே… உங்கள் PAN கார்டு மிக மிக அவசியம்

ஒளிப்பதிவாளர் யுவன் செல்வா பேசுகையில், “இது என் டீமுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது புராஜக்ட். எழுத்து தான் படத்திற்கு முக்கியம்; அது இருந்தால் போதும் என நீருபித்து காட்டிய பாலாஜி தரணிதரனுக்கு நன்றி. இந்த பாடல் பார்த்த போது கடல் கடந்து சிங்கப்பூரில் இருந்தாலும் நம்மை இணைப்பது தமிழ் என தோன்றியது. பாடல் வரிகள் மிக நன்றாக இருந்தது. பாடியவர்கள் அற்புதமாக பாடியிருந்தார்கள். சத்யா இங்குள்ளவர்களை நம்பி இங்கு புது முயற்சிகளுக்கு நன்றி. ஆதித்யா என்னுடைய கோ டைரக்டர், ஆதித்யாவிடம் ஒரு வேலையை கொடுத்துவிட்டால் நீங்கள் அவரை முழுமையாக நம்பலாம்.

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாடலை உருவாக்கியிருந்தாலும், இந்தப்பாடலை பத்திரிக்கையாளர் நினைத்தால் பெரிய அளவில் கொண்டு செல்லலாம் என நம்புகிறேன். என் குழுவினர் அனைவரும் அந்த அளவுக்கு மிக சிரமப்பட்டு உழைத்துள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts