TamilSaaga

முகக்கவசத்தை ஒழுங்கா போடுங்க.. அறிவுரை சொன்ன ஓட்டுநருக்கு அடி – ஆடவருக்கு சிறை

மலேசியாவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடுவார் நடராஜன் மாரிசூசே, இவர் சென்ற ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அங் மோ கியோ பகுதியியல் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சேவை எண் 130 பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது நடராஜன் முகக்கவசம் அணிந்திருந்தார், ஆனால் அதை முழுமையாக அணியாமல் மூக்குக்கு கீழே இறக்கிவிட்டு தொலைபேசியில் பேசிக் கொண்டே பேருந்தில் ஏறி இருக்கின்றார். இதைக்கண்ட பேருந்தின் ஓட்டுனர் அவரை முகக்கவசத்தை முறையாக போடும்படி கூற நடராஜனும் முழுமையாக போட்டுக்கொண்டு பேருந்தின் பின்புற சீட்டில் அமர்ந்துள்ளார்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அவர் முகக்கவசத்தை கீழே இறக்கி விட அதை கண்ட ஓட்டுனர் சிங்கப்பூர் அரசு சட்டப்படி முகக்கவசத்தை சரியாக அணியாதது சட்டப்படி குற்றம் என்று கூற அவர் மீண்டும் முகக்கவசத்தை முறையாக போட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்து ஓட்டுநரை நோக்கி வந்த நடராஜன், அவரை தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு அவர் தோள்பட்டையில் தாக்கிவிட்டு பேருந்திலிருந்து இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடராஜனிடம் நடந்த விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டு வரை சிறை தண்டனை மற்றும் 4000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. அவர் அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக 8 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts