TamilSaaga

லாரியை ரிவர்ஸ் எடுக்கும் போது விபத்து… சிங்கப்பூரில் உயிரிழந்த தொழிலாளி – நிறுவனம் வெளியிட்ட உருக்கமான அறிக்கை!

SINGAPORE: லாரியை ரிவர்ஸ் எடுக்கும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சிங்கப்பூரின் மனிதவளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த புதன்கிழமை (அக்.5) Hougang 1 ஷாப்பிங் மாலில் உள்ள loading bay-ல் லாரி ஒன்று மோதியதில் 69 வயது மதிக்கத்தக்க கிளீனர் உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இச்சம்பவம் காலை 9.50 மணியளவில் நடந்ததாகவும், அந்த நபர் Avon Cleaning Services நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

இதையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டி உயிரிழப்புக்கு காரணமான லாரி டிரைவர் (25), கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க – வெளிநாட்டில் குடும்பத்துக்காக உழைத்து உழைத்து.. ஓடாய் தேய்ந்த பெண்… உடலை உருக்கிய பக்கவாதம் – இந்தியா கொண்டு வர உதவிய தமிழர்கள்!

இந்த சம்பவத்தையடுத்து, 2022 இல் பணியிட இறப்புகளின் எண்ணிக்கை 2021 இல் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. அதாவது, இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 37 ஊழியர்கள் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியாகியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய அந்த ஊழியர், செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக MOM கூறியுள்ளது.

இதையடுத்து, அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இச்சம்பவத்தால் நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளோம், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நேரத்தில் எங்களால் முடிந்த உதவிகளை குடும்பத்தினருக்கு வழங்க தயாராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts