TamilSaaga

“ஏன் இந்த வேலை?” : பேருந்தில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டல் – 53 வயது நபர் சிங்கப்பூரில் கைது

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகளில் 15 மற்றும் 20 வயதுடைய இரு சிறுவர்களைத் துன்புறுத்திய 53 வயது நபருக்கு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நூராமன் முகமத் நூர் என்ற அந்த நபர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் 12 மற்றும் 18 வயதுடைய பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய இதேபோன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனைக்கு பரிசீலிக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு முதல் இதுவறை 6 முறை இவருக்கு இந்த குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முந்தைய கடைசி வழக்கில், 2019 மே மாதம் MRTல் 31 வயதான ஒருவரைத் துன்புறுத்தியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜனவரி 21 அன்று மாலை 6.30 மணியளவில், அவரால் முதலில் பாதிக்கப்பட்ட, 15 வயது இடைநிலைப் பள்ளி மாணவர், ஒரு பேருந்தில் ஏறி கடைசி வரிசையில் அமர்ந்துள்ளார். நூராமன் அவருக்கு அருகில் அமர்ந்து, அவர்களின் கைகள் தொடும் வகையில் பாதிக்கப்பட்டவரின் பக்கம் சாய்ந்துள்ளார்.
பின்னர் அவர் பாதிக்கப்பட்டவரின் இடுப்புப் பகுதியைப் பிடித்து, அவரது கால்சட்டையின் மேல் காய் வைத்து அவரைத் தொட்டு துன்புறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் உடனே எழுந்து சென்றுவிட்டார். பின்னர் போலீசில் புகார் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது. நூராமன் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் அதே குற்றத்தை செய்துள்ளார். பிப்ரவரி 8ம் தேதி மாலை 5.15 மணியளவில், உட்லண்ட்ஸ் இன்டர்சேஞ்சில் பேருந்தில் ஏறிய 20 வயது பாலிடெக்னிக் மாணவர் ஒருவரிடம் அதே செயலை செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட அவர் போலீசுக்கு போன் செய்தார். நூரமன் “பெண் உடை அணிந்திருந்ததாகவும், தனது அந்தரங்க உறுப்பைப் பிடித்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

அடக்கத்தை மீறிய குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது தடியடி அல்லது அத்தகைய தண்டனைகளின் கலவை வழங்கப்படலாம்.

Related posts