TamilSaaga

“ஆப்ரேஷன்; தொண்டையில் குழாய்” – வெளிநாட்டு ஊழியர் கணேஷ் உடல்நிலையில் திடீர் திருப்பம் – மனைவி வெளியிட்ட ஆடியோ

மலேசியாவின் Gemencheh Negeri Sembilan பகுதியில் வசித்து வரும் வெளிநாட்டு ஊழியர் கணேஷ், விபத்தில் சிக்கி 41 நாட்களுக்கும் மேலாக கோமாவில் இருக்கும் செய்தியை தமிழ் சாகாவில் செய்தியாக சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்.

கணேஷ் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விபத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் Kuala Pilah மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க – “பொன்விழா கொண்டாட்டம்” : ஐம்பது ஆண்டுகால வரலாறு – பார் வியக்கும் நாடாக மாறிய ஒரு “பாலைவனம்”

இந்நிலையில், அதே மருத்துவமனையில் கணேஷுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. விபத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கணேஷுக்கு அறுவை சிகிச்சை மூலம் தொண்டையில் குழாய் வைக்கப்பட்டுள்ளது. நேற்று யூரியா 25 என்று இருந்ததால், மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்ய முடிவெடுத்தனர்.

இந்த சூழலில், அறுவை சிகிச்சைக்கு பிறகு முன்பிருந்த நிலைமையை விட கணேஷ் உடல்நிலை சற்று முன்னேறி இருப்பதாக மனைவி புனிதா தெரிவித்துள்ளார். எனினும், அவருக்கு முற்றிலும் நினைவு திரும்பவில்லை.

அறுவை சிகிச்சை முடிந்தாலும், கணேஷ் தொடர்ந்து ஐசியு-வில் தான் வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் கூறியதாக புனிதா தெரிவித்துள்ளார். “என் கணவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று முகம் தெரியாதவர்கள் கூட பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி. அவர் முழுவதும் நலம் பெற்று எழுந்து வர தொடர்ந்து உங்கள் பிரார்த்தனைகள் தேவை” என்று புனிதா தனது முகநூல் பக்கத்தில் ஆடியோவாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் தனிநபர் கடன் மோசடி” – குருமூர்த்தி என்பவர் உட்பட 3 முன்னாள் வங்கி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

முன்னதாக, கணவர் கோமாவில் இருப்பதால், வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் குழந்தையுடன் தவித்து வருவதாக புனிதா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts