TamilSaaga

“கவனிக்காமல் விட்ட விளக்கால் ஏற்பட்ட தீ” : விரைந்து வந்து தீயை அணைத்த சிங்கப்பூர் SCDF படை

சிங்கப்பூரில் நேற்று நவம்பர் 4 இரவு சுமார் 8.35 மணியளவில், 1E கண்டோன்மென்ட் சாலையில் உள்ள 34வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தகவல் அறிந்து SCDF அங்கு வந்தபோது அங்கு தீ கொழுந்துவிட்டு எரிவதை கண்டனர் நல்வாய்ப்பாக தீ விபத்தின் போது யூனிட்டில் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மெரினா பே தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு தீயை அணைக்க துவங்கினர்.

SCDF வெளியிட்ட முகநூல் பதிவு

புகையால் மூட்டப்பட்ட பிரிவுக்குள் எச்சரிக்கையுடன் அவர்கள் சென்றனர். ஒரு நீர் ஜெட் மூலம் கொழுந்துவிட்டு தீ அணைக்கப்பட்டது. வெப்பம் மற்றும் புகை சேதங்களால் மீதமுள்ள இடங்களும் பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 பேர் காவல்துறையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட அறையில் உள்ள பிரார்த்தனை பலிபீடத்தில் கவனிக்கப்படாமல் எரிந்த எண்ணெய் விளக்குகளே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. SCDF, எரியும் பொருட்களை கவனிக்காமல் விட்டுவிட வேண்டாம் என்றும், உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் அதை அணைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது என்று SCDF அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts