சிங்கப்பூரில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலுமே இனவெறி தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதைப்போன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கதற தகவல்கள் பலரிடன் மனதினையும் கலங்க வைத்திருக்கிறது.
2021 ஆம் ஆண்டில் மேடம் ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய் 57 வயதாகும் இவரை இனவெறியால் தாக்கியதாக வோங் சிங் ஃபோங்கின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் முதல் நாள் நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்தது.
அந்த வழக்கின் ஆஜரான மேடம் நிதா விசாரணை தொடங்கும் முன்னரே கதறி அழுதார். அழுதுவிட்டு தன்னை சமாதானம் செய்தவர் ஒளிபுகாத தடுப்புக்குள் இருந்து தன்னுடைய சாட்சியை சொன்னார். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில், சம்பவம் நடந்த இடத்திற்குத் திரும்பி சென்றால் அழுவேன் என்று கூறிய மேடம் நிதா மார்பில் என்னை உதைக்கும் முன் வோங் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
மாவட்ட நீதிபதி ஷைஃபுதின் சருவானிடம் மேடம் நிதா பேசும்போது, அவரது குரல் உடைந்தது. “அந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. நான் சோகமாகவும் பயமாகவும் உணர்கிறேன். இந்தியனாக இருப்பது தவறா? இந்தியனாக இருக்கும் தேர்வினை நான் எடுக்கவில்லை… இது நடக்காமல் இருந்திருக்கலாம் என்று விரும்புகிறேன்.
32 வயதான வோங், மேடம் நிதா இன உணர்வுகளை தாக்கி காயப்படுத்திய வழக்கில் தனக்கும் ஒரு முறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிறார். மே 7, 2021 அன்று சோவா சூ காங்கில் உள்ள நார்த்வேல் காண்டோமினியம் அருகே இந்தக் குற்றங்களைச் செய்ததாக சிங்கப்பூரர் வோங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: டெஸ்ட் அடிக்க லட்சக்கணக்கில் பணத்தை அழிச்சது போதும்.. சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்க வெறும் 80,000 ரூபாய் மட்டுமே.. நான்கே நாட்களில் Certificate!
வோங் தாக்கியதாக கூறப்படும் நேரத்தில், மேடம் நிதா காலையில் சோவா சூ காங் ஸ்டேடியத்தில் உள்ள ஃபாஸ்ட் புட் உணவகத்தில் பணிபுரிந்ததாகவும், மாலையில் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
சம்பவத்தன்று தனது முகமூடியினை சற்று கீழிறக்கி விறுவிறுப்பாக மைதானத்தில் நடந்து கொண்டிருந்தபோது, யாரோ பின்னால் இருந்து கத்துவதைக் கேட்டதாக அவர் நீதிபதி ஷைஃபுதீனிடம் கூறினார்.
பின்னர் திரும்பிப் பார்த்தவர், வாங் மற்றும் ஒரு பெண்ணுடன் என்னை நோக்கி வந்தார். அவர்கள் தன்னை “முகமூடி” போடும்படி கூறினர். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வெளியில் முகமூடி அணிவது கட்டாயம் என்று தனக்குத் தெரியும் என்றும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் மேடம் நிதா கூறினார். மேலும், தான் வேகமாக நடந்து கொண்டிருந்ததால் சுவாசத்தை மேம்படுத்த முகமூடியை கீழே இழுத்திருந்தேன்.
வோங் பின்னர் என்னை நோக்கி வந்து, அவமதிக்கும் வகையில் இனவெறி கொண்ட மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நான் பேச பிடிக்காமல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று மட்டும் கூறினேன். நான் நினைப்பதற்குள், அவர் என்னை நோக்கி மார்பில் உதைத்தார். மிக வேகமாக உதைத்ததால் நான் அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.
ஆனால் வோங் எதுவும் நடக்காதது போல அந்த இடத்தினை விட்டு சென்று விட்டார். சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு பெண் முன் வந்து உதவினார். அன்று மாலை டியூஷன் வகுப்புகளுக்குப் பிறகு போலீசில் புகார் செய்ததாக கூறினார்.
மேடம் நிதாவை விசாரிக்கும் போது, வோங் வழக்கறிஞர் சிம் பிங் வென், தனது வாடிக்கையாளரின் கூற்றுப்படி, அவர் வோங்கிடம் உங்க வேலையை பாருங்க எனக் கூறியதாக தெரிவித்தார். ஆனால் இதை நான் சொல்லவே இல்லை என மறுத்து இருக்கிறார் நிதா. மீண்டும் விசாரணை தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.