TamilSaaga

Skill டெஸ்ட் அடிக்காமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா? இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கா? இத படிங்க செம Clarity கிடைக்கும்!

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்காமல் செல்ல முடியுமா என்ற சந்தேகம் இன்னமுமே பலருக்கு இருக்கிறது. அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கும் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெளிவுப்படுத்தி கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் வேலைக்காக தினமும் நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றனர். பலருக்கும் ஒரு வேலையை வாங்கி எப்படியாவது செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கான வழி தான் பலருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. சிங்கப்பூரில் வேலை வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் தமிழ் சாகாவில் அதற்கான சாத்தியமான அத்தனை தகவல்களும் இருக்கிறது. மறக்காமல் அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல அக்டோபர் மாதம் Skilled டெஸ்ட் அடிச்சீங்களா? அப்பாடா! ஒரு வழியா ரிசல்ட் வந்தாச்சு… இன்னொரு இனிப்பான செய்தியுடன்!

ஏமாறாமல் 2 முதல் 3 லட்சத்திற்குள் சிங்கப்பூரில் வேலை தேட உதவுவது தான் Skilled டெஸ்ட். ஆனால் இப்போது இருக்கும் கோட்டா பிரச்னையால் பலருக்கும் Skilled டெஸ்ட் இல்லாமல் சிங்கப்பூர் போகலாமோ என்ற எண்ணம் தான் உருவாகிறது. இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள். skilled அடிக்காமல் சிங்கப்பூர் வரலாமா? அதிலுள்ள சாதக பாதகத்தினை தெரிந்து கொள்ள முடியும்.

சிங்கப்பூர் வேலைக்கு செல்ல தயாராகி விட்டீர்கள். ஆனால் உங்கள் பணி அனுபவம் மட்டுமே இருக்கிறது. படிப்பு இல்லை என்றால் உங்களால் PCM பெர்மிட்டில் சிங்கப்பூருக்கு வர முடியும். இதற்கு சம்பளமும் Skilled ஊழியர்களின் அளவில் தான் கொடுக்கப்படும். ஆனால், இந்த பெர்மிட்டில் வருபவர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் அதிகமக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த பெர்மிட்டில் நீங்க சிங்கப்பூர் வருபதற்கு 2 லட்சத்திற்குள் தான் ஆக வேண்டும். இதை விட அதிகமாக ஏஜெண்ட் கேட்டால் கொடுக்க வேண்டாம். இந்த பெர்மிட்டில் வரும்போது 2 வருடம் தான் அதிகமாக சிங்கப்பூரில் இருக்க முடியும். அதன்பின், மீண்டும் முதலில் கட்டிய அதே தொகையை கட்டி தான் வர முடியும். அவ்வளவு எளிதில் சம்பள உயர்வு இருக்காது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் SPassல் ஏதோ ஒரு வேலை… படிப்புக்காகலாம் வேணாம் என நினைக்கும் நபரா நீங்க… ஒரு நிமிஷம்… நீங்க அறியாத S-Passன் உண்மை முகம் இப்படி தான் இருக்கும்

அடுத்து, டிகிரியோ அல்லது டிப்ளமோவோ வைத்திருக்கேன். என்னால் Skilled அடிக்காமல் சிங்கப்பூர் வர முடியுமா என்று கேட்டால் அதற்கும் விடை முடியும் என்பது தான். நீங்க SPass அல்லது EPassல் சிங்கப்பூர் வர முடியும். சம்பளமும் மாதம் 2500 சிங்கப்பூர் டாலரில் தொடங்கி 3300 சிங்கப்பூர் டாலர் வரை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பாஸிலும் ஓவர் டைம் மற்றும் சம்பள உயர்வு இருக்கும். படித்தவர்களுக்கு Skilled ஐ விட இந்த பாஸ் தான் சிறந்தது.

இதில் பிரச்னையே படிக்காமல் சிங்கப்பூர் வர நினைப்பவர்களுக்கு தான். உங்களுக்கு ஒரு தொழில் அனுபவம் இருந்தாலும் இல்லாமல் போனாலும் skilled அடித்து சிங்கப்பூர் வருவதே நல்லது. ஏனெனில், இதில் வரும் போது சம்பளத்தில் பிடித்தம் என்பதே இருக்காது. OT அதிகமாக கொடுக்கப்படும். இதனால் உங்களால் வீட்டுக்கு ஒரு நல்ல தொகையை அனுப்ப முடியும். அடுத்தடுத்த உங்களால் சிங்கப்பூரில் கம்பெனி மாறிக்கொண்டு போக முடியும். தொடர்ச்சியாக சம்பள உயர்வும் இருக்கும்.

PCM பெர்மிட்டில் சிங்கப்பூர் வந்து டெஸ்ட் அடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தால் ஏற்கனவே கடன் வாங்கி சிங்கப்பூர் வந்திருக்கும் உங்களின் 2 அல்லது 3 மாத சம்பளத்தினை டெஸ்ட் அடிக்க கட்டணமாக கொடுக்க வேண்டும். கம்பெனி ஆதரவு இல்லாமல் டெஸ்ட் அடித்து விட்டாலும் உங்களால் அவர்களின் அனுமதி இல்லாமல் உடனே வேறு கம்பெனிக்கு மாற முடியாது. இதனால் டெஸ்ட் அடிக்கும் ஐடியாவில் இருந்தால் தமிழ்நாட்டில் முடித்து விட்டு அந்த வொர்க் பெர்மிட்டிலேயே வருவதே நல்லது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts