ஒரு தொழிலாளியின் மரணம் என்பது நாம் தினமும் கடந்துபோகும் பல விஷயங்களில் ஒன்றல்ல என்பதை நிரூபித்துள்ளது சிங்கப்பூரில் சில தினங்களுக்கு முன்பு இறந்த தமிழக தொழிலாளி ஒருவரின் மரணம். கடந்த ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவர் தான் தமிழரான பெரியசாமி ராஜேந்திரன்.
சிங்கப்பூரின் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், கடந்த ஜூன் 22ம் தேதி காலை 10.15 மணியளவில் ஒரு பணியிட விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிரேனில் சிக்கி இறந்தவர் தான் ராஜேந்திரன் வயது வெறும் 32.
7 மாத கைக்குழந்தை, 13 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள், 30 வயதில் மாமனார் மற்றும் மாமியார் நிழலில் வாழும் ஒரு மனைவி என்று ஒரு மிகப்பெரிய குடும்பத்தை தனியே தவிக்கவிட்டு சென்றுள்ளார் ராஜேந்திரன். சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜேந்திரனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களின் நிலையை நமது தமிழ் சாகா செய்தி குழு கேட்டறிந்தது.
மேலும் பொதுமக்கள் உதவியை நாடும் அந்த குடும்பத்திற்கு உதவ நமது தமிழ் சாகா செய்திக்குழு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. ராஜேந்திரனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் கீழ் காணும் வங்கி கணக்கிற்கு தங்கள் உதவிகளை செய்யலாம்.
Name – ANBARASAN GNANAMANI
Account Number – 50100334412880
BANK – HDFC
BRANCH – LA PLAZA, GP Road, Chennai – 600002
RTGS / NEFT IFSC – HDFC0001364
NOTE: உதவி செய்தவர்கள் அவர்களின் பெயர் மற்றும் Receipt-ஐ +91 8269 418 418 என்ற நம்பருக்கு தவறாமல் வாட்ஸ் அப் செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.
வெளிநாடு சென்று சம்பாரிக்கும் அனைத்து தொழிலாளர்களும் தங்கள் குடும்ப நன்மைக்காகத் தான் சிங்கப்பூர் போல உலக அளவில் பல நாடுகளில் போராடி வருகின்றனர். ஆனால் அப்படி வேலை செய்யும் சிலரின் நிலை ராஜேந்திரனை போல சீக்கிரமே முடிந்துவிடுகிறது.