சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாகி இருக்கின்றனர். அடிமட்ட வேலை துவங்கி மிகப்பெரிய பொருப்பில் கூட இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் அதிகம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த வளர்ச்சியால் சிங்கப்பூர் ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பணியிட நேர்மைக்கான Tripartite Committee திங்கள்கிழமை (பிப்ரவரி 13) ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் பாரபட்சத்திற்கு எதிரான பணியிட சட்டத்திற்கான 20 பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் கேபிள் ஒயர் திருடியதாக சிக்கிய தமிழர்கள்… 3 பேருக்கு அபராதம்.. நான்காவது தமிழருக்கு நடந்தது என்ன?
மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தொழிலாளர் தலைவர் இங் சீ மெங் மற்றும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (SNEF) தலைவர் ராபர்ட் யாப் ஆகியோர் Tripartite Committeeன் தலைவராக உள்ளனர்.
பல சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு கம்பெனி நிர்வாகம் ஆதரவாக இருந்து வேலைகளில் பாகுபாடு காட்டுவதாக புகார் அளித்து வருவதால், அடுத்த ஆண்டு, அநேகமாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, பாகுபாடு-எதிர்ப்பு பணியிடச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற பரிந்துரைகள் செய்துள்ளது இந்த கமிட்டி.
மனிதவள அமைச்சகத்தின் (MOM) கணக்கெடுப்பின்படி, வேலை தேடுபவர்களின் விகிதம் 2018 இல் 43 சதவீதத்திலிருந்து 2021 இல் 25 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இந்த குறைவு தொற்று பரவல் காலத்தில் செய்யப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளால் எனக் கூறப்படுகிறது.
எந்தவிதமான பணியிட பாகுபாடுகளையும் நாங்கள் சகித்து கொள்ள முடியாது என என்று டாக்டர் டான் கூறினார். இருப்பினும், 25க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டே டெஸ்ட் அடிக்கலாமா? அதுக்கும் வழி இருக்கு? கம்மி செலவில் நல்ல லைஃப் வெயிட்டிங்!
கடந்த பொதுத் தேர்தலில் செங்காங் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட People’s Action Party (பிஏபி) வேட்பாளரான கமிட்டி இணைத் தலைவரும் தொழிலாளர் தலைவருமான இங் சீ மெங், முன்மொழியப்பட்ட சட்டம் நிறைவேறியதில் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மகிழ்ச்சியடைகிறது என்றார். இது தொழிலாளர்களுக்கான குரல். எந்தவொரு தவறான முதலாளிகளுக்கும் எதிராக இது
சிறந்த தடுப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புவதாக தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கையின்படி, 2018 மற்றும் 2021 க்கு இடையில் ஆண்டு சராசரி 312 பாகுபாடு புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதில் 56 சதவீதம் nationality குறித்ததாகவே இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், உள்ளூர்வாசிகள் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. TGFEP மற்றும் FCF மீறல்களுக்காக முதலாளிகளுக்கு எதிராக MOM நடவடிக்கை எடுத்திருந்தாலும், அத்தகைய பாரபட்சமான செயல் புதிய சட்டத்தை மீறுவதாக இருக்கும்.
உண்மையில், உள்ளூர் ஐடி பட்டதாரிகள் தற்போது IT வேலைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமப்பட்டு வருகின்றனர். இருந்தும், சிங்கப்பூரில் பணிபுரிய இந்தியாவில் இருந்து பொறியாளர்கள் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் கிளையில் பணிபுரிய பல ஐடி ஊழியர்கள் இந்தியாவில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர் என்று காக்னிசன்ட் சிங்கப்பூர் ஐடி நிறுவனத்தைச் சேர்ந்த ஆதாரம் TOC சமர்பித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் சிங்கப்பூரில் பணிபுரிய MOMல் வொர்க் பாஸ் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து கடந்த ஆண்டு TOC காக்னிசண்ட் நிறுவனத்திற்கு பதில் அனுப்பியது. ஆனால் இன்றுவரை எந்த பதிலும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
பெரும்பான்மையானவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்ளூர் மற்றும் பிற தேசிய இனத்தவர்கள் சிறுபான்மையினர் மட்டுமே என்றும் TOC தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இங்கு பணிபுரிய இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் தரம் தன்னை ஈர்க்கவில்லை என்றும், மீட்டிங்கில் அவர்கள் தங்களுக்குள் இந்தியில் பேச முனைகிறார்கள். கூட்டத்திற்குள் இருக்கும் மற்ற இந்தியர் அல்லாதவர்களை மறந்துவிடுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணிக்கான பாஸ்களை MOM தொடர்ந்து வழங்குவது ஏன் என்று தெரியவில்லை என்றும் கமிட்டி தெரிவித்துள்ளது.