TamilSaaga

“ஐந்து வயது பெண் குழந்தையின் விரலை துண்டித்த Hand Dryer” : சிங்கப்பூரில் ஏற்பட்ட சோகம்

வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது நமது குழந்தைகள் மீது அதிகளவிலான கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்கு கூடுதல் சான்றாக சிங்கப்பூரில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. சிங்கப்பூரின் ION Orchard கடைத்தெரு பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்ற சிறுமி தனது கைகளை சுத்தம் செய்துவிட்டு அவற்றை உணர்த்துவதற்காக கைகளை உலர்த்தும் இயந்திரத்தின் முன் நீட்டியபோது அந்த இயந்திரத்தில் சிக்கி அந்த சிறுமியின் விரல் துண்டாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : 1000 இலவச சினோபார்ம் தடுப்பூசி வழங்க திட்டம்

கடந்த திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சம்பவத்தின்போது தன்னுடைய 9 வயதுடைய இரட்டை சகோதரர்களுடனும், மற்றும் பணிப்பெண்ணுடனும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குழந்தை அழும் சத்தம் கழிவறையிலிருந்து கேட்டதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்து அந்த கழிவறைக்குள் விரைந்தார்.

காரா என்று அந்த சிறுமி தனது கைகளை பிடித்தவாறு கழிவறையில் அலறிக் கொண்டிருந்த நிலையில் உடனடியாக அவளுடைய தந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் தற்போது வரை சிறுமிக்கு அந்த கையில் இரு முறை அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது என்று அவளது தந்தை கூறினார். தற்போது சிறுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் வலிகளை போக்கவும் சிறுமிக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுமியின் தந்தை “Chia” கூறுகையில் : “கழிவறையில் கைகளை உயர்த்தும் அந்த இயந்திரம் இயங்கிய போது அந்த இயந்திரத்தின் மூடி அதில் பொருத்தப்படவில்லை என்று கூறினார். மேலும் குழந்தையின் கை அந்த எந்திரத்தில் சிக்கிய போது அதை திறக்கும் சாவியை கண்டுபிடிக்க முடியாமல் பணியாளர்கள் தவிக்கதாகவும். உடனே சில பணியாளர்கள் இணைந்து தங்கள் கையை அதனுள் செலுத்தி சிறுமியின் கையை வெளியே எடுத்ததாகவும் கூறப்படுகிறது. கைகளை துடைப்பதற்கு டிஷ்யூ பேப்பர்களை எடுப்பதாக நினைத்து சிறுமி தவறுதலாக அந்த இயந்திரத்திற்குள் கையை நுழைத்துள்ளாள் என்றும் தந்தை Chia கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அந்த நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தந்தை chia.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts