TamilSaaga

“சிங்கப்பூரின் முன்னேற்றத்தை சார்ந்திருக்கிறது ஜோகூர்” : மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மகாதீர் மொஹமத்

ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தை குறித்து பேசிய பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் பின் மொஹமத் தற்போது மீண்டும் தனது முகநூல் வாயிலாக ஒரு கருத்தினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “ஜோகூர் சிங்கப்பூரின் உள்நாட்டாக மாறியுள்ளது, அதன் வெற்றிக்காக சிங்கப்பூரையும் அது சார்ந்துள்ளது. எனவே எங்கள் நிலத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரை விரிவுபடுத்த நாங்கள் உதவினோம்” என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டடுள்ளார்.

சிங்கப்பூருக்கு தெற்கே உள்ள ரியாவ் தீவுகள், பாதம் மற்றும் பிந்தன் உள்ளிட்ட தீவுகள் குறித்தும் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார். டச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு, ஜோகூர் பேரரசு இந்த தீவுகளை ஆரம்பத்தில் வைத்திருந்ததாக அவர் கூறினார். இந்த தீவுகள் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக மாறியது என்றும். இந்தத் தீவுகளைத் திரும்பப் பெறுமாறு மலேசியா ஒருபோதும் கோரவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேஷிய முன்னாள் பிரதமர் மகாதீர் அவர்களின் பதிவு

மகாதீரின் சமீபத்திய முகநூல் பதிவுகள் அவ்வப்போது [பல பரபரப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த அக்டோபர் 20 அன்று, பெட்ரா பிரான்கா பிரச்சினை குறித்து மகாதீர் பதிவிட்டார். மேலும் சிங்கப்பூருக்கு தண்ணீர் மற்றும் மணலை விற்று மலேசியா தன் பாகங்களை “விற்று” விட்டது என்ற சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் மலேஷியா தண்ணீர் பிரச்சனை

மேலும் கடந்த அக்டோபர் 27 அன்று அவர் வெளியிட்ட பதிவில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிங்கப்பூர் செல்ல அனுமதித்த மலேசிய அரசாங்கத்தை மகாதீர் கடுமையாக சாடினார். மேலும் அதே பதிவில், சிங்கப்பூருக்கு புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களை விற்கும், அரசாங்கத்தின் முடிவையும் அவர் கேள்வி எழுப்பினார். சிங்கப்பூருடனான தண்ணீர் பிரச்சினை குறித்தும் அவர் பல முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts