TamilSaaga

“சிங்கப்பூரில் இரு முக்கிய இடங்களை இணைக்கும் சைக்கிள் பாதை” : அமைச்சர் இன்று திறந்து வைத்தார்

சிங்கப்பூரில் Taman Jurong பகுதி குடியிருப்பாளர்கள் இப்போது 5.6km நீளமுள்ள சைக்கிள் ஓட்டிகளுக்கு என்று அமைக்கப்பட்டுள்ள பாதையைப் பயன்படுத்தலாம். இது லேக்சைட் மற்றும் சைனீஸ் கார்டன் MRT நிலையங்களை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதை ஜூரோங் Lake மாவட்டத்தில் 15 கிமீ நெட்வொர்க்குடன் இணைகிறது. ஜூரோங் கிழக்கில் குடியிருப்பாளர்கள் 30 நிமிடங்களுக்குள் தங்களுக்கு தேவையான வசதிகளை அடைய இந்த பாதை அனுமதிக்கிறது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று சனிக்கிழமை (அக்டோபர் 30) வெளியிட்ட அறிக்கையில் ​​தெரிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் Tampines-ல் மற்றொரு 4km நீளமுள்ள சைக்கிள் பாதை தொடங்கப்படும். என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் முழுவதும் சைக்கிள் ஓட்டும் பாதைகளின் மொத்த நீளம் 500km ஆக உயரும் என்று LTA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த முயற்சிகள் ஒரு நகரத்திற்கும் மற்றும் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதையும். குடியிருப்பாளர்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்துவதையும் மற்றும் பாதை பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சகம் கூறியது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் அதிகரித்த Teslaவின் ஆதிக்கம்

சிங்கப்பூர், வரம் 2030ம் ஆண்டுக்குள் 1,300 கிமீ சைக்கிள் பாதைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அங் மோ கியோ, பிஷான், புக்கிட் பஞ்சாங், செம்பவாங், டோ பயோ மற்றும் யிஷுன் ஆகிய இடங்களில் புதிய பாதைகள் படிப்படியாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டு வருவதாக LTA தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமையன்று ஜூரோங் பாதையை திறந்துவைத்த ஜூரோங் GRC-யின் எம்பி தர்மன் சண்முகரத்தினம், “பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அருகருகே பயணிக்க இப்போது அதிக இடம் உள்ளது என்றார்”.

“கடந்த வருடத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் உடற்பயிற்சி, ஓய்வு, வேலைக்குச் செல்வதற்கோ அல்லது அக்கம்பக்கத்தில் உள்ள வேலைகளுக்காகவோ நடந்து செல்வதையும், சைக்கிள் ஓட்டுவதையும் நாங்கள் கண்டதால் இது சரியான நேரத்தில் அமைக்கப்பட்ட பாதையாக கருதுகிறோம்” என்றும் அவர் கூறினார்.

Related posts