TamilSaaga

இனி வரும் மாதங்களில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு தாறுமாறாக இருக்கும்… நம்பிக்கையான தகவல்களை வெளியிட்ட புள்ளி விவரங்கள்!

உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் இச்சூழ்நிலையில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்புகள் இந்த ஆண்டு இறுதியில் அதிகரிக்க கூடும் என நம்பிக்கையூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் வருகின்ற காலாண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக முதலாளிகள் தெரிவித்துள்ளனர். மேன்பவர் குரூப் எனப்படும் வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளிகளுக்கான வேலை வாய்ப்பு நிலவரத்தை பற்றி முதலாளிகளிடம் நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்த முடிவு வெளியாகி உள்ளது.

510 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து தெளிவாக பார்க்கும் பொழுது வரும் நாட்களில் 12 சதவீதம் ஆள் குறைப்பு செய்யப்பட்டாலும், புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 48 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது உள்ள இதே தொழிலாளர்கள் எண்ணிக்கை நீடிக்கும் என 38 சதவீதம் முதலாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது வரும் மாதங்களில் 36 சதவீதத்திற்கும் அதிகமாக வேலை வாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இது கடந்த ஆண்டு ஒப்பிடும்பொழுது இரண்டு சதவீதம் அதிகம் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட எல்லாத் துறையைச் சார்ந்தோரும் வேலை வாய்ப்பு அதிகரிக்க கூடும் எனவே தெரிவித்துள்ளனர். எனவே பொருளாதார மந்தநிலையால் சிங்கப்பூரில் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என தொழிலாளர்கள் தவிர்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த புள்ளி விவரங்கள் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

Related posts