சிங்கப்பூரில் யோகா பயிற்றுவிப்பாளர் ஒருவர் தனது யோகா ஸ்டுடியோவில் இரண்டு ஆண்டுகளாக ஐந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான அந்த இந்தியப் பிரஜையின் அடையாளத்தை, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக நீதிமன்றம் வெளியிட மறுத்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) நீதிமன்றத்தில் அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ள.
24 மற்றும் 29 வயதுடைய பாதிக்கப்பட்டவர்களின் பின்புறம், மார்பகங்கள் மற்றும் அந்தரங்க பாகங்களைத் தொட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2019 மற்றும் ஜூலை 2020-க்கு இடையில் யோகா ஸ்டுடியோவில் இந்த குற்றங்கள் நடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றது. குற்றம் சாட்டப்பட்டவர் மாவட்ட நீதிமன்றத்தில் தனது சிங்கப்பூர் நண்பர் தனக்கு ஜாமீன் தருவார் என்று கூறினார், மேலும் அவர் ஒரு வழக்கறிஞரைப் பெற்று விசாரணைக்குக் கோரப் போவதாகக் கூறினார்.
அவருக்கு 15,000 வெள்ளி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, அடுத்த மாதம் அவர் நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களை அடையாளம் காண வழிவகுக்கும் எதையும் வெளியிடுவதைத் தடுக்க ஒரு GAG உத்தரவு இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முந்தைய காவல்துறை அறிக்கையின்படி, அந்த நபர் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா கற்பிக்கும் போது அவர்களைத் பாலியல் ரீதியாக அணுகியதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கான தண்டனைகள், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், தடியடி அல்லது இந்தத் தண்டனைகளின் கலவையாக வழங்கப்படும்.
“சமூகத்தின் தனிப்பட்ட பாதுகாப்பை அச்சுறுத்தும் பாலியல் குற்றவாளிகள் மீது சகிப்புத்தன்மை காட்டாது என்றும், மேலும் அவர்கள் மீது சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் போலீசார் தெரிவித்தனர்.