TamilSaaga

சிங்கப்பூரில் 500-க்கும் அதிகமான Electronic gadget-கள் 50% தள்ளுபடி விலையில்!வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

சிங்கப்பூரில் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல், மொபைல் அக்சஷரிஸ், ஃபிட்னஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 500 பிராண்டட் பொருட்கள் ஏறக்குறைய பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வாட்ச், டேப்ளப், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களும் பாதி விலைக்கு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் பலர் இங்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.

பிரபலமான நிறுவனங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் சலுகை விலையில் இந்த விற்பனை நடத்தப்பட்டு வருகிறது. லினோவா, பிலிப்ஸ் போன்ற டாப் பிராண்ட் நிறுவனங்களின் தயாரிப்புக்கள் கிட்டதட்ட 50 சதவீதம் சலுகையில், அதாவது பாதி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தரமான, உயர் தொழில்நுட்ப பொருட்கள் விற்பனை ஜூன் 16 ம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த சலுகை விலை விற்பனை சிங்கப்பூரில் உள்ள குறிப்பிட்ட 5 மால்களில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

சலுகை விற்பனை நடக்கும் இடங்கள் :

1. Hougang Mall
90 Nougang Ave 10
#01-09 s538766

திங்கள் முதல் ஞாயிறு வரை அனைத்து நாட்களும் காலை 10.45 மணி துவங்கி, இரவு 09.15 வரை விற்பனை நடந்து வருகிறது.

2. Far east plaza
14 Scotts road
#01-k8

இங்கு காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை விற்பவை நடைபெற்று வருகிறது.

3. Westgate
3 gateway drive
#B1-k7@ K8

இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10.45 முதல் இரவு 09.15 வரை விற்பனை நடைபெறுகிறது.

4. Nex
23, serangoon central
#04-10

இங்கு தினமும் காலை 10.45 முதல் இரவு 09.15 வரை விற்பனை நடக்கிறது.

5. UBI centra
10 ubi cres,
ubi techpark, lobby d
#05-69

இங்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி துவங்கி, மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமையில் விற்பனை கிடையாது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! 

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts