TamilSaaga

“இணைய வழியில் காதல் மோசடி உள்பட பல குற்றங்கள்” : சிங்கப்பூரில் 303 பேரிடம் கடுமையான விசாரணை

சிங்கப்பூரில் நாடளாவிய அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, மோசடி செய்தவர்களாக கருதப்படும் 303 பேரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சந்தேக நபர்கள் 1,020-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் $8.4 மில்லியனுக்கும் அதிகமாக இழந்ததாகவும் நம்பப்படுகிறது என்று கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : “பரபரப்பான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்” – வரி செலுத்தத் தவறிய 23 பயணிகள் பிடிபட்டனர்

இணைய காதல், இ-காமர்ஸ், ஆள்மாறாட்டம், முதலீடு, வேலை மற்றும் கடன் வகை மோசடிகள் ஆகியவை இந்த மோசடிகளில் அடங்கும். தற்போது போலீசாரால் விசாரிக்கப்படும் சந்தேக நபர்களில் 15 முதல் 71 வயதுடைய 211 ஆண்களும் 92 பெண்களும் அடங்குவர். வர்த்தக விவகார திணைக்களம் மற்றும் ஏழு போலீஸ் பிரிவுகளின் அதிகாரிகள் டிசம்பர் 3 முதல் 17 வரை இரண்டு வார கால அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி செய்தல், பணமோசடி செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக சந்தேகநபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் இந்த ஏமாற்றும் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும் பணமோசடி செய்தல் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,00,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உரிமம் இல்லாமல் சிங்கப்பூரில் எந்தவொரு கட்டணச் சேவையையும் வழங்கும் வணிகத்தை நடத்தும் குற்றத்திற்கு $1,25,000 அபராதம், மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். “மோசடிகளில் ஈடுபடக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிராக காவல்துறை தீவிர நிலைப்பாட்டை எடுக்கிறது, மேலும் குற்றவாளிகள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts