TamilSaaga

சிங்கப்பூர் தொழில்துறையின் பிரதான சந்தையாக மாறிவரும் இந்தியா… நான்காண்டுகளில் 300க்கு அதிகமான நவீன நிறுவனங்கள் வருகை!

இந்தியாவில் பல்வேறு வகையான மொழிகள் பேசும் மக்கள் அதிகம் மேலும் மக்கள் தொகையும் அதிகம் என்பதால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நாடுகள் இந்தியாவில் புதிய நிறுவனங்களை தொடங்கி சோதித்துப் பார்க்க, இந்தியாவிற்குள் நுழைகின்றன. இதில் சிங்கப்பூர் தற்பொழுது முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் சிங்கப்பூரின் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் அதிகப்படியான அலுவலகங்களை திறந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை, சிங்கப்பூரை சேர்ந்த ஏறத்தாழ 300 புதிய நவீன நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஈடுபட்டுள்ளனர் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிப்பதால், சிங்கப்பூரின் தொடக்க கால புதிய நவீன நிறுவனங்களை தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. புதிதாக பொருட்களை உற்பத்தி செய்து பல்வேறு வகையான இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதை கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஏற்ற சந்தையாக இந்தியா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டில் சோதித்து பார்த்து, சோதனைக்கான முடிவுகளை பெற்று அதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை நிவர்த்தி செய்த பின் வேறு நாடுகளான இந்தோனேசியா, துபாய் மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்திய சந்தையானது உபயோகப்பட்டு வருகின்றது. குறிப்பாக சொல்ல போனால், ‘போட் சிங்க்’ எனப்படும் இயந்திர மனித தொழில்நுட்ப நிறுவனம் சிங்கப்பூரில் 2017 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் உள்ள பெங்களூரில், இயந்திர மனித சாதனங்களை உருவாக்கும் ஆளை மற்றும் ஆய்வு நிலையத்தை அமைத்தது. ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை, பல்வேறு நிறுவனங்களில் புகுத்தும் இயந்திரங்களை உருவாக்கி அவற்றை வெற்றிகரமாக சந்தைப்படுத்தியுள்ளது. இவ்வாறு இந்தியாவானது, அதிகப்படியான பன்முக தொகையின் காரணமாக, புதிதாக தொழில் தொடங்கும் அனைவரையும் ஈர்க்கும் சந்தையாக உருவெடுத்து வருகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related posts