TamilSaaga

பெருந்தொற்று, உயரும் விலைவாசி, மனிதவள தட்டுப்பாடு : மும்முனை தாக்குதலில் தவிக்கும் சிங்கப்பூர் F&B நிறுவனங்கள்

சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக அடிக்கடி மாறும் இயக்கட்டுப்பாடு ஒருபுறம் வாட்ட, உணவு மற்றும் பான வணிகங்களுக்கான அழுத்தத்தை இன்னும் அதிகரிக்கிறது உயரும் செலவுகள். உணவுப் பொருட்கள் மற்றும் ஊதியங்கள் தான் பொதுவாக F&B ஆபரேட்டர்களுக்கான இயக்கச் செலவில் மூன்றில் இரண்டு பங்கைக் நிரப்புகின்றன. “இந்த பெருந்தொற்று உண்மையில் 30 சதவிகிதம் மற்றும் கூட்டாக அதிக செலவு அழுத்தங்களைச் சேர்த்துள்ளது” என்று 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூரின் உணவக சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் ஏற்றுமதி அக்டோபரில் 17.9% உயர்வு

மேலும் “இவை கடுமையான மனிதவள நெருக்கடி நிலைமை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் எரிசக்தி விலை அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று முதல் ஆறு மாதங்களில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக CNAவிடம் பேசிய வணிக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உதாரணமாக, அரிசி, உறைந்த பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக பர்கர் பார் ஃபேட்பாய் தெரிவித்துள்ளது. Modern zi char bistro Enjoy House & Bar தனது கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, காய்கறிகள் மற்றும் பீர் ஆகியவற்றிற்கு 5 முதல் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்தி வருவதாகக் கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

சில நேரங்களில் சப்ளையர்கள் விலைகளை 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளனர், மைனர் ஃபுட் சிங்கப்பூரின் தலைமை நிர்வாக அதிகாரி டெலன் சோ, அத்தகைய அதிகரிப்புகளை “நியாயமற்றது” என்று கூறுகிறார். ThaiExpress மற்றும் Xin Wang Hong Kong Cafe போன்ற F&B சங்கிலிகளை இயக்கும் அவரது நிறுவனம் தங்கள் மெனு பட்டியலில் உள்ள சில உணவுகளை தற்காலிகமாக அகற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது.

Related posts