TamilSaaga

Singapore Pool-ல் lottery வாங்குவதில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! புள்ளி விவரங்களுடன் ஒரு ரிப்போர்ட்!

சிங்கப்பூர்-ல் நடைபெறும் சூதாட்டங்கள், லாட்டரிகள் போன்றவை அரசாங்கத்தில் முறையாக அனுமதி பெற்றே இயங்குகின்றன. இருப்பினும் இதற்க்கு அடிமையானவர்கள் ஏமாற்றப்படுவதும், அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும் இன்றும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள். இது போன்ற சூதாட்டங்களில் அதிக பணம் பெற நினைத்து தங்களிடம் உள்ளதை இழந்துபோகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ நிறுவப்பட்ட அமைப்பு தான் NCPG – National Council On Problem Gambling.

இதற்கான தீர்வாக தங்களைத் தாங்களே இது போன்ற சூதாட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலம் விலக்கி வைத்துக்கொள்ளும் வழிமுறையை NCPG நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு உளவியல் ரீதியான மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளையும் பரிந்துரை செய்கின்றனர்.

இதனால் பயனடைந்தவர்களின் புள்ளிவிவரங்களை NCPG செய்தித்தொடர்பாளர் சிம் கிம் குவான் வெளியிட்டார். 2023 ஆம் ஆண்டு பல தொழிலாளர்கள் சூதாட்டங்களில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை 2022-ஐ விட இரு மடங்காகும்.

ஆன்லைனில் நடைபெறும் லாட்டரிகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள 2023 ஆம் ஆண்டு 19,038 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது 2022 ன் எண்ணிக்கையை விட 118 சதவிகிதம் அதிகமாகும். 2022-ல் விலக்கம் பெற விண்ணப்பித்தவர்கள் 8731.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் NCPG வெளியிட்ட அறிக்கையின்படி ஜாக்பாட் இயந்திரங்களை பயன்படுத்துவதில் இருந்து விலக்கம் பெற விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை

2022 -ல் 9,821 ஆனால் 2023-ல் 23,072 கடந்த வருடத்தை விட இது 134 சதவிகிதம் அதிகமாகும்.

தற்பொழுது இந்த சேவை ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளதால் மேலும் பல பேர் இதனால் பயனடைவார்கள் என சிம் விளக்கமளித்தார். குறிப்பாக ஆன்லைன் சாட்டிங் சேவையில் தான் அதிக எணிக்கையிலான உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைன் சாட்டிங் மூலமாக உதவிகளைப் பெற முடியும் என்பதால், நேரடியாக பேச தயங்குபவர்கள் அல்லது பேச முடியாத சூழலில் இருப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் பயன்பெறுவர். மேலும் NCPG உதவி எண் மற்றும் ஆன்லைன் சாட்டிங் மூலம் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 2022 ல் 10,388 ஆகா இருந்தது. 2023 ல் 12,462 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் வழங்கப்படும் சேவை சூதாட்டங்களில் சிக்குண்டு கிடக்கும் மக்களுக்கான ஆலோசனைகள், தன்னைத்தானே விலக்கிக்கொள்ளும் Self Exclusion குறித்த அறிவுரைகள் என பல்வேறு விதங்களில் உதவியாக உள்ளது.

ஜாக்பாட், சூதாட்டங்கள், லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த விளையாட்டுகளில் நிதி இழப்பு அபாயங்கள் அதிகம் ஆகவே அதன் ஆபத்துகளை உணர்ந்து விளையாடுவது அவசியம். இருப்பினும் பலர் இதற்க்கு மிகவும் அடிமையாகும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதன் மூலம் அதிகப்படியான பணத்தை இழந்து மன அழுத்தம், குடும்பங்களில் பிரச்சனை, நிதிப் பிரச்சனை போன்றவற்றை சந்திக்கின்றனர். அதை தவிர்க்க மக்களுக்கு உதவ அமைக்கப்பட்டது தான் NCPG.

Self-Exclusion என்பது இதற்கான தீர்வு, இதன் மூலம் தங்களின் ஆபத்தான சூதாட்ட பழக்கங்களில் இருந்து விடுபட நினைப்பவர், தன்னைத்தானே சில காலம் விலக்கிக்கொள்ள NCPGல் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பித்தவர் ஜாக்பாட், சூதாட்டங்கள், லாட்டரி என எதையெல்லாம் தனக்கு ஆபத்தான பழக்கமாக குறிப்பிட்டுள்ளாரோ அங்கெல்லாம் சில காலங்களுக்கு தடை செய்யப்படுவார். எந்தவிதமான விளையாட்டுகளிலும் அவரால் பங்கேற்க முடியாது. அவரின் நிலையை பொறுத்து 1 முதல் 5 வருட காலங்களுக்கு இதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார். இது தானாக முன்வந்து கொடுக்கும் உறுதி எனவே இதனை எப்பொழுது வேண்டுமானாலும் NCPG அறிவுரையின் கீழ் திருப்பப் பெறவும் முடியும். அதற்க்கு குறைந்த பட்ச விலக்குக் காலம் முடிவடைந்திருக்க வேண்டும். ( 6 மாதங்கள் முதல் 1 வருடங்கள் வரை)

இது போன்ற விளையாட்டுக்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் தான் என்பதால் MWC – Migrant Workers’ Centre உடன் இணைந்து அவர்களுக்கான விழிப்புணர்வை NCPG அமைப்பு ஏற்படுத்தி வருகிறது.

MWC -ன் நிர்வாக இயக்குனரான மைக்கேல் லிம் இது குறித்து கூறுகையில்:

சூதாட்டம், ஜாக்பாட், லாட்டரி போன்ற விளையாட்டுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது வெளிநாடுகளில் இருந்து வரும் புலம் பெயர் பணியாளர்கள் தான்! இங்கு உள்ள மொழி வேறுபாடு, தனிமை மற்றும் சிங்கப்பூர் சட்டம் குறித்த அறியாமை போன்றவற்றால் இவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அந்த அறியாமை தான் இவர்களை இது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் தள்ளுகிறது. MWC கடந்த 2011-ல் இருந்து மக்களை இதுபோன்ற நிதி இழப்பு அபாயங்களில் இருந்து காக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இது போன்ற விளையாட்டுகள் பொருளாதார ரீதியாக ஒருவரை பின்னடையச் செய்வதுடன், மனம் மற்றும் உடல் நலத்திற்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

இதிலிருந்து விடுபட விரும்பினால் தொழிலாளர்களுக்கு பதில் அவர்களுடைய நிறுவனம் கூட இந்த Self Exclusion தீர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இல்லையெனில் தொழிலாளர்கள் கூட தங்களுக்கு தாங்களே விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.

Self Exclusion விண்ணப்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. 2022 உடன் ஒப்பிடுகையில் ஆலோசனை பெறுபவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது எனவும் NCPG செய்தித்தொடர்பாளர் சிம் கிம் குவான் தெரிவித்தார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts