சிங்கப்பூரில் வேலைக்காக வருபவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று தங்குமிடம் தான். இதில் யாருக்கு கம்பெனி ரூம் கொடுக்கும். யார் தனியாக தேட வேண்டும்? வாடகை எப்படி இருக்கும் என்ற முழு தகவல் உங்களுக்காக.
சிங்கப்பூர் வேலைக்காக கிளம்பும் பலர் எதை வேண்டாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் வருவார்கள். இருந்தும் அவர்களுக்கு இருக்கும் ஒரு கவலை தங்குமிடம் எப்படி தேடுவது என்பது தான். ஆனால் வொர்க் பெர்மிட் மற்றும் pcm permitல் வருபவர்களுக்கு இந்த பிரச்னையே இல்லை. அவர்களுக்கு கம்பெனி தரப்பில் இருந்தே ரூம் ஏற்பாடு செய்யப்பட்டு விடும். சில கம்பெனிகள் அதற்கு வாடகை தொகையை சம்பளத்தில் பிடித்தாலும், பல கம்பெனிகள் அதை செய்வதில்லை.
சிங்கப்பூரின் விதிப்படி s-pass வைத்திருப்பவர்கள் dormitoryல் தங்க கூடாது. student visaவில் வருபவர்களுக்கு கல்லூரியில் விடுதி வசதிகள் இருக்கும். s-pass, e-pass, dependent pass, tourist visa உள்ளிட்ட பாஸ்களை வைத்திருப்பவர்கள் வெளியில் தான் ரூம் எடுத்து தங்க வேண்டும். வேலைக்கான நேர்காணல் சமயத்தில் நீங்களே ரூம் தேடி கொள்ள கம்பெனி கூறி இருந்தாலும் உங்களுக்கு முதல் சில நாட்கள் கம்பெனியே ரூம் கொடுத்து விடுவார்கள். சிங்கப்பூர் வந்ததும் நீங்கள் ரூம் தேடிவிட்டு மாறிக் கொள்ளலாம்.
99.co singapore, ohmyhome, couchsurfing உள்ளிட்ட ஆப்பின் மூலம் வீட்டில் இருந்தே ரூம்கள் தேடிக்கொள்ளலாம். இதில் கிடைக்காத பட்சத்தில் நீங்கள் நேரடியாகவே சென்று விசாரித்து ரூம் தேடிக்கொள்ளலாம். சில கடைகளில் ரூம் வாடகைக்கு கேட்டால் ஈசியாக கிடைத்து விடும். மாதம் ஒருமுறை தான் வாடகை கேட்பார்கள். வீட்டு ஓனரை பொறுத்து அட்வான்ஸ் தொகை கேட்பதில் மாறுதல்கள் இருக்கும். முடிந்த வரை தனியாக ரூம் எடுக்காதீர்கள். 3 முதல் 4 பேருடன் இணைந்து தங்கி கொள்வது உங்க பர்ஸையும் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.