சிங்கப்பூரில் தான் skilled test என்ற தகவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஆராய தமிழ் சாகா குழு களத்தில் இறங்கி விசாரித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் டெஸ்ட் அடித்து விட்டு வரமால் இந்தியாவில் இருப்பவர்களால் கோட்டாவின் அளவிற்கு கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கும்படி ஏற்பாடுகள் நடக்கும். skilled test முடிக்க நினைப்பவர்கள் சிங்கப்பூர் வந்து டெஸ்ட் அடிப்பார்கள் என்ற தகவலும் வெளிவந்தவண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து எங்கள் தரப்பிலும் கடந்த வாரத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இதன் உண்மை குறித்து ஆராய தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல ஏஜென்சி நிறுவனத்திடம் பேசினோம். அவர்கள் இதுகுறித்து ஏகப்பட்ட தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
அவர்கள் கூறியதாகவது, ministry of manpowerல் இந்த skilled test இடம்மாற்றம் என்னும் பேச்சுவார்த்தை நடந்தது என்னவோ உண்மை என்ற தகவல் தான் எங்களுக்கும் வந்திருக்கிறது. இது டெஸ்ட் அடித்து விட்டு வராமல் சொந்த நாட்டிலேயே இருப்பவர்கள் என்னும் பேச்சுக்கே இடம் இல்லாமல் போகும். அது சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி தான். இதில் ஊழியர்களும் பயன்பெறுவார்கள்.
45 முதல் 60 நாள் கஷ்டப்படவே தேவை இருக்காது. டெஸ்ட் வேலைகள் துவங்கி சான்றிதழை பெற அதிகபட்சம் 6 நாட்கள் தான் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது எல்லாமே பேச்சுவார்த்தையில் இருக்கும் தகவல்கள் தானே தவிர இதில் முடிவு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்து உறுதியான அறிவிப்புகள் MOM தரப்பால் ஜனவரி 3வது வாரத்திற்குள்ளவே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
சிங்கப்பூர் வர விரும்பும் இளைஞர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக வரும் ஜனவரி வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுவரை வெளியில் இருந்து வரும் எந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்களையும் நம்பவேண்டாம். MOM தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தவுடன் நமது தமிழ் சாகாவில் அதுகுறித்த முழு தகவல்களும் வெளியிடுப்படும்.