TamilSaaga

பாலத்திற்காக வீட்டை தரமறுத்த பெண் : 10 ஆண்டுகளாக போராடிய அரசு – இறுதியில் நடந்த சுவாரசியம்

சீனாவின் guangzhou என்று மாகாணத்தில் நெடுஞ்சாலை அமைக்க ஒரு பெண்மணி தனது வீட்டை தராத காரணத்தால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி பாலம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் guangzhou மாகாணத்தில் நெடுஞ்சாலை அமைக்க அந்நாட்டு அரசு பெரிய தனியார் நிறுவனம் ஒன்றிடம் குத்தகை வழங்கியது. அந்த நிறுவனமும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்விடத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், வீட்டின் சொந்தக்காரர்களிடம் பேசி அவர்களுடைய இடத்தை எல்லாம் மேம்பாலம் அமைக்க வாங்கியுள்ளது.

அப்படி வாங்கப்பட்ட இடங்களுக்கு பணமாகவோ அல்லது மாற்று நிலமாகவும் அந்த தனியார் நிறுவனம் கொடுத்து வந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த ஒரு பெண்மணி தனது வீட்டை தர மறுத்துள்ளார். அந்த தனியார் நிறுவனம் அதிக தொகையும் இரண்டு மடங்கு நிலமும் கொடுக்கிறேன் என்று கூறியும் அந்த பெண்மணி தனது இடத்தை தர மறுத்துவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில், அந்தப் பெண்மணியிடம் இருந்து எப்படியும் இடத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்த தனியார் நிறுவனம் பாலம் கட்டும் பணிகளை தொடங்கியது.

இருப்பினும் 10 ஆண்டுகால போராட்டமும் பயனளிக்காத நிலையில் அந்தப் பெண்மணியின் வீட்டைச்சுற்றி பாதை அமைத்து அந்த தனியார் நிறுவனம் பாலம் காட்டியுள்ளது. இரு பாலங்களுக்கு நடுவில் உள்ள அந்த வீட்டை பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.

Related posts