TamilSaaga

சிங்கப்பூர் பெட்ரோ பிராங்கா தீவின் அருகே பழமைவாய்ந்த கப்பல் சிதைவுகள் கண்டுபிடிப்பு

பெட்ரோ பிராங்கா தீவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள நீர்பகுதியில் 18ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு கப்பல் சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளமான ஒரு தீவு நாடாக இந்தியப் பெருங்கடலையும் தென்சீனக் கடலையும் இணைக்கும் உலகளாவிய கப்பல் பாதைகளில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக அமைந்திருக்க கூடிய சூழலில் தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க கப்பல் சிதிலங்களை கண்டறிந்தது கடல்துறை ஆய்வில் ஒரு மையில்கல்லாக பார்க்கப்படுகிறது.

ஆய்வின் போது கண்டறியப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒன்று ஷா முன்ஷா பயணக் கப்பல் என்று என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கட்டப்பட்ட இந்த ஷா முன்ஷா கப்பலானது சீனாவிலிருந்து இந்தியாவிற்கு 1796 ஆம் ஆண்டு பயணம் செய்த போது கடலில் மூழிகியதாகும்.

இந்த சிதைவு ஆய்வில் கண்டறியப்பட்ட பல்வேறு பொருட்கள் இந்த ஆண்டில் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் மீனின் வடிவம் கொண்ட செராமிக் சிற்பம் ஒன்றும் அடங்கியுள்ளது. பொதுவாக இந்த வடிவிலான மீன் “மகரம்” என்று அழைக்கப்படுகிறது. “மெர்லயன்” சின்னத்தை சிங்கப்பூரில் வடிவமைத்தவர் மகரத்தை தனது அடித்தளமாக வைத்து தான் வடிவமைத்திருக்க முடியும் மேலும் இந்த மகர சிற்பம் சாயம் பூசப்பட்டு அவை சிதிலமைடைந்த நிலையில் காணப்படுகிறது, இது இந்திய சந்தைக்காக கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்றும் ஆய்வாளர் மைக்கிள் பிளங்கர் கூறியுள்ளார்.

இந்தியா சீனாவில் மகரம்
மகர சிற்பமானது இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள திருப்புல்லாணி கோயில் மற்றும் சீனிவாசநல்லூர் கோயில் ஆகியவற்றில் மீன் வடிவிலான புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது. இந்த சிற்பங்கள் பொதுவாக மகர சிற்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜோதிடம் எனப்படும் கலையில் 12 ராசிகள் பயன்படுத்தப்படுகிறது அதிலும் மீன்வடிவ உடலில் ஆடு தலையை கொண்ட ஒரு சின்னம் அந்த மகர ராசி சின்னமாக உள்ளது. இதே போல் சீனாவில் இந்த மகர சிற்பத்தின் தலை பகுதியானது கடல் நாகத்தின் வடிவில் காணப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியா சீனா இடையே இருந்த கடல் வணிகம் பொருட்கள் பரிமாற்றம் மற்றும் மகரம் போன்ற சிறங்களுக்கான வரவேற்பு ஆகியவற்றை அறிய முடிகிறது.

Related posts