TamilSaaga

வெறும் 4 வெள்ளி செலவு செய்து நாலரை கோடி வென்ற தமிழக ஊழியர் – சிங்கப்பூரில் 4D லாட்டரியால் ஒரே இரவில் தலைகீழாய் மாறிய “Store Keeper” வாழ்க்கை

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் அதிகம் விரும்பும் ஒரு விஷயம் லாட்டரி. இவை 4D மற்றும் டோடோ என்று அழைக்கப்படும் ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் கட்டப்படும் பந்தயங்கள் ஆகும். இந்த பந்தயங்களை விளையாட நீங்கள் சிங்கப்பூர் ரூல்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் கணக்கு வைத்துக்கொண்டு விளையாடலாம்.

ஆனால், இதில் ஏமாற்று வேலை என்று எதுவும் கிடையாது. இது Genuine-ஆக நடைபெறும் லாட்டரி போட்டியாகும். சிங்கப்பூர் Pools ஒரு உலகத்தரம் வாய்ந்த கேமிங் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சிங்கப்பூர் Pools 4D லாட்டரி மற்றும் டோட்டோ பந்தயங்களை ஆன்லைனில் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் வைக்க அனுமதிக்கிறது.

சிங்கப்பூர் பூல்ஸ் கணக்கில் பதிவு செய்ய நீங்கள் கண்டிப்பாக சிங்கப்பூர் குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியிருப்பாளராகவோ அல்லது சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவராகவோ இருக்க வேண்டும். சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர் ஆக இருந்தால்,சரியான சிங்கப்பூர் வெளிநாட்டு அடையாள எண்ணுடன் குறைந்தது 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். உள்ளூர் மொபைல் எண்ணை வழங்க வேண்டும். இப்படி சில விதிமுறைகள் இதில் உள்ளன.

மேலும் படிக்க – இன்று ஒரே நாளில் மும்பை ரயில் நிலையமாக மாறிய சிங்கப்பூர் MRT.. மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கூட்டம்.. இப்படி பார்த்ததே இல்ல!

இந்நிலையில், 5 வருடங்களுக்கு முன்பு, சிங்கப்பூரில் ஒரு தமிழ் ஊழியர் லாட்டரி மூலம் கோடிக்கணக்கில் வென்றவர் இன்று தமிழகத்தில் தனது சொந்த ஊரில் சூப்பராக செட்டிலாகியுள்ளார். (பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது). சிங்கப்பூரில் Store Keeper-ஆக பணியாற்றி வந்தவர் சண்முகம். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2017ம் ஆண்டு 4d லாட்டரியை 4 டாலருக்கு வாங்கியுள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தான் அவர் அதனை வாங்கினார்.

ஆனால், ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால், கூரையை பெயர்த்துக் கொண்டு செல்வம் வந்து சேரும் அல்லவா. அதுபோல், வெறும் 4 டாலருக்கு 4d லாட்டரி வாங்கிய சண்முகத்துக்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய்க்கு பரிசு கிடைத்தது. அவருக்கு பரிசு கிடைத்தவுடன் கூட இருந்த நண்பர்கள் கொண்டாடினாலும், சண்முகமோ எப்போதும் போல அதே சாதாரண தொனியில் தான் இருந்தார். இத்தனை கோடி லாட்டரியில் விழுந்துவிட்டதே என்ற ஆர்ப்பரிப்பும் அவரிடம் இல்லை. Store Keeper வேலைக்காக சிங்கப்பூர் வந்த போது எப்படி இருந்தாரோ, லாட்டரி விழுந்த பிறகும் அப்படியே தான் இருந்தார்.

எனினும், ஒரே இரவில் சண்முகம் மல்டி மில்லியனராக மாறியதால், அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டலில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு ராஜ மரியாதை கொடுத்து மேற்கொண்டு லாட்டரி பரிசுத் தொகையையும் கொடுத்து தமிழகம் அனுப்பி வைத்தனர். அவரும் கூட இருந்த அத்தனை பேருக்கும் தடபுடலாக செலவு செய்து மகிழ்வித்து சொந்த ஊர் திரும்பினார்.

மேலும் படிக்க – இதை எதிர்பார்க்கவேயில்ல!.. முதல்முறையாக சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு “சூப்பர்” அறிவிப்பு – Address, Timing உட்பட முழு விவரம் இங்கே

இப்போது 5 வருடங்கள் ஆகிவிட்டாலும், லாட்டரி பணத்தை உபயோகமாக செலவு செய்து, இன்று சொந்த ஊரில் அருமையான வாழ்க்கையை சண்முகம் வாழ்ந்து வருகிறார். எனினும், இந்த விளையாட்டின் மூலம் சிலர் கோடீஸ்வரர்களானாலும், உழைத்த பணத்தை கோட்டை விட்டவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.

மாதம் முதல் தேதி சம்பளம் வந்தால், நேராக லாட்டரி வாங்க செல்பவர்கள் தான் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எப்போதாவது, போகிற போக்கில் லாட்டரி வாங்குவதில் பிரச்சனையில்லை. ஆனால், அதையே தொழிலாக வைத்திருப்பவர்களே அதிக பணத்தை இழக்கின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் நீங்களும் சண்முகம் ஆகலாம்.. ஆனால், எல்லோருக்கும் சண்முகம் போல அதிர்ஷ்டம் அடிக்குமா என்றால்… வாய்ப்பே இல்ல ராஜா!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts