TamilSaaga

சிங்கப்பூரில் வேலை தேடுறீங்களா! லட்டு மாதிரி வாய்ப்பை தட்டி தூக்க மாஸான Resume ரெடி செய்யணுமா? இந்த தவறினை மட்டும் செய்யாதீங்க

சிங்கப்பூர் வேலைக்கு அப்ளே பண்ண Resume ரெடி செய்ய போகும் முன் இந்த விஷயங்களையெல்லாம் மறந்துடாதீங்க. முதல் பார்வையே உங்கள் Resume தான். உங்களின் மதிப்பினை சொல்லும் Resume சரியாக இருந்தாலே உங்களுக்கு முதல் படி சிறப்பாக அமையும்.

முதலில் சிங்கப்பூர் வேலைக்காக நீங்க Resume ரெடி பண்ணிட்டு இருக்கீங்கனா கண்டிப்பாக இரண்டு பக்கங்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்க. ஏனெனில், ஒரே பக்கத்தில் இருக்கும் Resumeகள் போதுமான தகவல்களை கொடுக்காது.

உங்கள் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளும் தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் ஐடிக்களுக்கு தெளிவான Fontகளை பயன்படுத்துங்கள். உங்கள் Resumeல் இவை முதலில் இடம் பெறுவது போல பார்த்து கொள்வது அவசியம். அடுத்து உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் Resumeல் இருக்க வேண்டும். முன் அனுபவம் இருந்தால் தேவைப்படாது Entry-Level வேலைகளுக்கு கேட்கப்படும்.

முதலில் Resume summary இருக்க வேண்டி பார்த்து கொள்ளுங்கள். அடுத்து அனுபவம் இருந்தால் அதை போட்டு கல்வி தகுதியை அதற்கு அடுத்ததாக குறிப்பிடுங்கள். Resume பெரும்பாலும் PDF அல்லது MS Wordல் இருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முக்கியமாக ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

உங்களுடைய சமூக வலைத்தள பக்கமான LinkedInன் லிங்கினை குறிப்பிடுங்கள். நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதினை nationalityல் குறிப்பிட மறந்து விடக்கூடாது. வெளிநாட்டினரை வேலைக்கு எடுப்பதில் சிங்கப்பூரில் கோட்டா இருப்பதால் இந்த தகவல் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்க பணி அனுபவம் மற்றும் வேலை பார்த்த தகவல்களை (*) Symbol கொடுத்து எழுதுங்கள். இப்படி எழுதும் போதும் அது பார்ப்பவர்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் கொண்டு சேர்க்கும். முக்கியமாக Times New Roman, Calibri அல்லது Arial Fontsஐ உங்க Resumeல் பயன்படுத்துங்கள். இந்த தகவல்களை கொண்டு நீங்க Resume தயார் செய்தால் கண்டிப்பாக நேர்காணல் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. All the Best!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts