TamilSaaga

எந்தெந்த விசா அல்லது Work Pass -ல் இருந்தால் சிங்கப்பூரில் Skilled Test அடிக்க முடியும்? அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் Skilled Test அடிக்க என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்? எந்தெந்த வீசாவில் வந்தவர்கள் Skilled Test அடிக்கலாம்? tourist visa மூலம் சிங்கப்பூர் வந்தவர்கள் Skilled Test அடிக்கலாமா? என்பது சந்தேகங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல வேண்டும் விருப்பம் இருக்கும் அல்லது அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கும் பெரிய சந்தேகம் ஆகும்.

சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக Skilled Test அடித்திருக்க வேண்டும். இதை இந்தியாவில் இருந்தும் அடித்து விட்டு வரலாம் அல்லது இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகும் Skilled Test அடிக்கலாம். ஆனால் அதற்கு குறைந்தபட்ச தகுதிகள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Skilled Test அடிப்பதற்கான தகுதிகள் :

  • சிங்கப்பூரில் Skilled Test அடிக்க வேண்டும் என்றால் work pass, s pass, work permit, student pass இப்படி ஏதாவது ஒரு செல்லத்தக்க பாஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
  • 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், 5ம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
  • BCA Academy அல்லது BCA வால் அங்கீகரிக்கப்பட்ட training and testing centres களில் இருக்கும் SEC(K) மூலம் ஊழியர்கள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
  • tourist visa மூலமாக சிங்கப்பூர் வந்தவர்கள் கண்டிப்பாக Skilled Test அடிக்க முடியாது. tourist visa என்பது வெறும் ஊர் சுற்றிப் பார்க்க மட்டுமே.
  • Skilled Test அடிக்க ஊழியர்கள் வைத்திருக்கும் பாஸ் குறைந்தபட்சம் ஓராண்டிற்காவது செல்லுபடியாக கூடியாக இருக்க வேண்டும்.
  • சிங்கப்பூரில் கட்டுமான துறையில் அனுபவம் இல்லாத புதிய ஊழியர்கள் அல்லது 4 ஆண்டுகளுக்கு குறைவான அனுபவம் உள்ள ஊழியர்கள் Skilled Test அடிக்க முடியும்.
  • குறைந்த பட்சம் 1600 சிங்கப்பூர் டாலர்களை அடிப்படை சம்பளம் கொண்டவர்களாகவோ அல்லது அதிக தகுதிகள் கொண்ட R1 higher skilled worker ஆக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts