TamilSaaga

சிங்கப்பூரை ரசிக்க Tourist visaல் வரப்போறீங்களா? உங்களுக்கு இந்த விசா கிடைக்க இதை மிஸ் பண்ணாதீங்க… அப்புறம் வருத்தப்படுவீங்க

புது வருஷம் பிறக்க போது எல்லாரும் எக்கசக்கமா ஊர் சுத்த ப்ளானாலெல்லாம் போட்டுக்கிட்டு இருப்பீங்கள. வெளிநாடுலாம் போற ஐடியால இருந்தா சிங்கப்பூர் வருவதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் கேட்பாங்க? எப்படி விசா எடுக்கலாம்கிற உங்களிடம் இருக்கும் அதிக குழப்பத்திற்கான தெளிவான விடையை சொல்றோம்.

சிங்கப்பூரை சுற்றி பார்க்க இந்திய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.4 மில்லியன் இந்திய சுற்றுலாப் பயணிகள் லயன் சிட்டிக்கு வருகை தருகின்றனர். இந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன் ஆன்லைனில் சிங்கப்பூர் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். 4-5 நாட்களில் இந்தியர்களுக்கான சிங்கப்பூர் விசாவைப் பெறலாம்.

Tourist visaவை வாங்க அதிகபட்ச கட்டணமாக இந்திய மதிப்பில் 3700 ரூபாய் கட்டணத்துடன் 300 ரூபாய் சர்வீஸ் கட்டணமும் கேட்கப்படும். இது உங்களின் விசாவிற்கான செலவு தான்.

சிங்கப்பூர் விசாவிற்கான ஆவணங்கள்:

  • சிங்கப்பூர் செல்ல உங்க பாஸ்போர்டின் காலவதி குறைந்தபட்சம் 6 மாதங்கள் இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 3 வெற்று பக்கங்கள் + அனைத்து பழைய பாஸ்போர்ட்களின் பாஸ்போர்ட் எண் முன்பு சிங்கப்பூர் பயணம் செய்திருந்தால்.
  • சிங்கப்பூர் விசா விண்ணப்பப் படிவம்.
  • 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள்
  • உங்களின் விவரம் அடங்கிய தனிப்பட்ட கடிதம் (வேலை செய்பவர்கள் என்றால் வெள்ளை காகிதம் போதும். சுயதொழில் செய்பவர்கள் என்றால் நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் இருக்க வேண்டும்).

நீங்கள் பணியில் இருக்கிறீர்கள் என்றால் உங்களின் கடந்த 3 மாத சம்பள விபரங்கள், கம்பெனியில் கொடுக்கப்பட்டிருக்கும் அடையாள அட்டை. நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால் உங்க தொழில் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான லைசன்ஸ், MOA அல்லது பார்ட்னர்ஷிப் பத்திரம் இருக்க வேண்டும். இதுவே நீங்கள் ஓய்வூதியராக இருந்தால் அதற்கான தக்க சான்று கொடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் பள்ளி அல்லது கல்லூரியின் அடையாள அட்டை. நீங்கள் மைனராக இருந்து அவர்கள் உங்களுடன் சிங்கப்பூர் வரவில்லை என்றால் பெற்றோரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் ரூ. 100/- ஸ்டாம்ப் பேப்பரில் வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு போன்ற அடையாளச் சான்று தர வேண்டும். நீங்கள் நண்பர் அல்லது உறவினரைப் பார்க்கச் சென்றால் அவர்களின் அழைப்புக் கடிதம் (LOI) அல்லது V39A படிவம் சமர்ப்பிக்க வேண்டும். சிங்கப்பூர் சுற்றுலாவிற்கு ஸ்பான்சர் யாரு செய்தால் அவர்கள் முறையாக ஒரு கடிதம் தர வேண்டும். முக்கியமாக Tourist visaவில் சிங்கப்பூர் வருபவர்கள் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு உறுதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

இதை தொடர்ந்து சிங்கப்பூருக்கு செல்ல விமான டிக்கெட் விழாக்காலங்களில் ரூபாய் 27000த்தினை விட அதிகமாகவே இருக்கும். நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும் நாட்களுக்கான செலவினை குறிப்பிட்டு 10 நாட்களுக்கு உங்களுடைய மொத்த பயணத்திற்கான செலவுகள் ஒருவருக்கு 1 லட்சம் வரை வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உங்களின் தனிப்பட்ட செலவு மட்டுமே. சுற்றி பார்க்கும் தளத்தில் வாங்கப்பட்டும் கட்டணங்கள் சேர்க்கும் போது இதில் பெரிய மாற்றம் இருக்கும்.

முக்கியமாக இந்த விசாவில் நீங்க சிங்கப்பூருக்கு வரும் போது உங்களின் கல்வி சான்றிதழ் குறித்த எந்த டாக்குமெண்ட்ஸையும் கைகளில் வைத்திருக்க கூடாது. சிங்கப்பூர் விசாவில் வரும் போது 30 நாட்கள் மட்டுமே இங்கு தங்க முடியும். அந்த விசா 2 வருடம் மட்டுமே செல்லுபடியாகும். சிங்கப்பூர் விசாவிற்கு அப்ளே செய்யும் போது உங்களுடைய வங்கி கணக்கில் குறைந்தபட்சமாக 50000 ரூபாய் இருக்க வேண்டியது கட்டாயம். ஏஜென்ட் மூலமாக இதற்கு அப்ளே செய்ய முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts