TamilSaaga

சிங்கப்பூர் செல்ல விசா வந்துவிட்டதா? ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க.. ஏஜெண்ட்டிடம் பணத்தை கொடுக்கும் முன்பு.. இதை செக் பண்ணுங்க!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கும் ஊழியர்கள் பாடாதப்பாடு பட்டு லட்சத்தில் காசை கட்டி வாங்கிய IPA விசாவிலும் தற்போதைய சூழலில் தில்லுமுல்லு நடந்து வருகிறது. இதனை நம்மிடம் காசு வாங்கிய ஏஜென்ட்களே செய்து வருகிறார்கள்.

சிங்கப்பூர் வர வேண்டும் என்றாலே, ஏஜென்ட்டுகளை நோக்கி செல்ல வேண்டிய இன்றைய சூழலில், IPA-வில் நடக்கும் மிகப்பெரிய மோசடிகள் பற்றியும், நீங்கள் அதில் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்குகிறது இந்த செய்தி.

முதலில் சிங்கப்பூர் செல்ல வேண்டுமெனில், ஏதோ.. எங்கேயோ விளம்பரங்களில் வரும் ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டு பேசி வேலைக்கு ஏற்பாடு செய்வதை முதலில் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், ஒரு ஏஜென்ட் எவ்வளவு பணம் வாங்குகிறார் என்பதை விட, அவர் எவ்வளவு உண்மையாக இருக்கிறார் என்பதே இங்கு முக்கியம், பணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

ஏனெனில், அவர் உண்மையாக நடந்து கொண்டால், மற்ற வேலைகள் அதுவே தானாக முடிந்துவிடும். ஸோ, உங்களுக்கு மிகவும் தெரிந்த அல்லது உங்கள் நண்பர்களையோ, உறவினர்களையோ இதற்கு முன் சிங்கப்பூர் அனுப்பிய ஏஜென்ட்டாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நீங்கள் வேலைக்காக மெனெக்கெடுவது குறைந்தபட்ச உத்தரவாதத்தை கொடுக்கும்.

மேலும் படிக்க – 2 வருடங்களுக்கு பிறகு.. மீண்டும் இலவச சிங்கப்பூர் சுற்றுலா.. ஈஸியா அப்ளை செய்வது எப்படி?

சரி.. இப்போ விஷயத்துக்கு வருவோம். ஏஜென்ட்டிடம் பணம் எல்லாம் செலுத்தி உங்கள் கைக்கு விசா வந்ததும் அதனை முதலில் பிரிண்ட் போட்டுக் கொள்ளுங்கள். மொத்தம் 12க்கும் அதிகமாக இருக்கும் அந்த பக்கங்களில் சிங்கப்பூர் நாட்டின் விதிமுறைகள் மற்றும் உங்கள் கம்பெனி குறித்தும், சம்பளம் குறித்தும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒருவரி கூட விடாமல் முழுமையாக படித்துவிடுங்கள். ஏனெனில், உங்கள் விசாவில் என்னென்ன உள்ளது என்பதை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

IPA என்பது எடிட் செய்யப்படும் ஆவணம் என்பதால், அதில் பெயர் உள்ளிட்ட இதர தகவல்களை மாற்றி போலியான வொர்க் பெர்மிட் தயாரிக்கும் மிகப்பெரிய ஏமாற்று வேலை அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த போலி வொர்க் பெர்மிட்-களை கொடுத்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்துவிட்டு மாயமாகி விடுவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.

சரி… உங்களுக்கு வந்திருக்கும் விசா உண்மையானது தானா என்பதை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பது?

ஜஸ்ட் உங்கள் மொபைலில் mom.gov.sg என டைப் செய்து Search கொடுங்கள். சிங்கப்பூர் மனித வளத்துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பக்கம் ஓபன் ஆகும். அந்த பக்கத்தில் கீழே “eServices” என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்தால், இன்னொரு பக்கம் திறக்கும். அதில் Application status via work permit one என இருக்கும். அதனை க்ளிக் செய்து, I agree என்பதை கொடுத்துவிட்டு உள்ளே செல்லுங்கள். பிறகு, enquiry என இருக்கும் ஐகானை க்ளிக் செய்யுங்கள். அதில் Foreign worker details என்பதை ஓகே செய்யுங்கள். பிறகு அதில் NRIC No, Passport no மற்றும் பெயரை எண்ட்ரி செய்யுங்கள்.

பிறகு, “next” க்ளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு போகும். அதில் உங்க IPA நம்பரை டைப் செய்யுங்கள். அதிலேயே உங்கள் IPA “அப்ரூவ்” என வந்தால் உங்களிடம் இருப்பது உண்மையான விசா தான். “Record not found” என வந்தால் ஏதோ ஒரு குளறுபடி நடந்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். உடனடியாக உங்கள் ஏஜென்ட்டை தொடர்பு கொண்டு, “IPA Record not found-னு வருது” சொல்லி ஏன் என்று காரணம் கேளுங்கள். அங்கே அவர் ஜெர்க் அடிப்பது போல் பேசினால், ஏதோ சித்து விளையாட்டு நடக்கப் போகிறது என்று அர்த்தம். ஸோ நீங்கள் உஷாரா இருங்க, இந்த தகவலை பகிர்ந்து உங்கள் நண்பர்களையும் உஷாராக்குங்க.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts