TamilSaaga

Singapore Corona Update : உள்ளூரில் புதிதாக நான்கு பேருக்கு பரவிய தொற்று

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பல வாரங்கள் கழித்து சிங்கப்பூரில் பதிவாகியுள்ள குறைந்த அளவிலான தொற்று இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய 3 பேர் உளப்பட நாட்டில் இன்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட சிலருக்கு ஏற்கனவே தனிமைப்படுத்துதலில் இருந்தவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பலரிடம் தொற்று பரவல் அதிகமாக காணப்படும் நிலையில் பல நாடுகளுக்கு தங்களுடைய எல்லைகளை கடுமையாகிவருகின்றது சிங்கப்பூர் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 62,606 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,212ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 170 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை 36 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

தொற்றின் அளவை குறைக்க சிங்கப்பூர் அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி முதல் மேலும் பல தளர்வுகள் சிங்கப்பூரில் அறிவிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts