TamilSaaga

Singpass அக்கவுண்ட் பற்றிய உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் இந்தப் பதிவு! முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பு.

சிங்கப்பூரில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் அல்லது குடியிருப்பாளர்களும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டியது இந்த சிங் பாஸ்(singpass). இந்த சிங் பாஸ்(singpass) திட்டத்தை சிங்கப்பூர் அரசு 2003 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த சிங் பாஸ்(singpass) திட்டம் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அரசு நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும் மேலும் அதன் திட்டங்களை பயன்படுத்தவும் உதவுகிறது. சிங்கப்பூரில் இருக்கும் 150 க்கும் திட்டத்தோடு தங்களை இணைத்துள்ளது இதன் மூலம் அந்த 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பொதுமக்கள் அதாவது சிங்கப்பூரில் வாழும் குடிமக்கள் அணுகலாம்.

குறிப்பாக ஒவ்வொரு துறையும் நீங்கள் நாடும்போதும் அதற்குரிய இணையதளத்தில் சென்று உங்களுக்கென லாகின் ஐடி (login ID) உருவாக்கி அதன் மூலம் பயன்படுத்த முடியும். ஆனால் ஒவ்வொரு துறைக்கும் நீங்கள் ஒவ்வொரு லாகின் ஐடியை உருவாக்க வேண்டும் (login ID). ஒவ்வொரு துறைக்கும் ஆக்சஸ் ஐடியை பராமரிப்பது மிகவும் கடினமான செயல். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சிங்கப்பூர் அரசு இந்த சிங் பாஸ்(singpass) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென உருவாக்கும் லாகின் ஐடி அதாவது NRIC நம்பரை நீங்கள் அனைத்து அரசு சார்ந்த துறைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒருமுறை இந்த சிங் பாஸை பெற்ற பின் நீங்கள் அனைத்து விதமான அரசு துறைகளில் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இது உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும் கொண்டிருக்கும். இதன் மூலம் தனி மனிதர்களும் அல்லது நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் கல்வித்துறையில் தகவல்களை பெற வேண்டுமெனில் அல்லது உங்கள் தொழில் மற்றும் வருமான துறையில் அறிய வேண்டிய தகவல்களை இந்த சிங் பாஸ்(singpass) லாகின் ஐடியை கொண்டு அனைத்து தகவல்களையும் பெற முடியும். மேலும் இது வருங்காலத்தில் உங்களுக்கு, நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் இது நினைவில் கொண்டு உங்களுக்கு அறிவுறுத்தும்.

யார் யார் இந்த சிங் பாசை பெற முடியும் (singpass)? சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் PR, சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவோர், FIN வைத்திருப்போர் என அனைவரும் இந்த பாசை பெற்றிருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்காக வந்து இருக்கிறீர்களா ? உடனே சிங் பாசை விண்ணப்பித்து உங்களுக்கென ஐடியை பெற்றுக் கொள்ள வேண்டும் இந்த ஐடி இருந்தால் தான் உங்களால் சிங்கப்பூரில் வேலை செய்யவும் மற்றும் தகவல்களை பெறவும், செயல்களை செய்யவும் முடியும்.

எவ்வாறு சிங் பாசை விண்ணப்பிப்பது? சிங் பாசை பெற நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை படிப்படியாக மிகத் தெளிவாக பல்வேறு இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். இது உங்கள் முகத்தை வைத்து ஸ்கேன் செய்து அதன் மூலம் நீங்கள் பல்வேறு பொதுத்துறை சேவைகளை பயன்படுத்தலாம். அல்லது உங்களுடைய PIN mailer மூலம் லாகின் ஐடியை உருவாக்கி அதன் அடிப்படையில் நீங்கள் பொதுத்துறை சேவைகளை பயன்படுத்த முடியும். இரண்டும் மிக மிக எளிமையான முறையில் செய்யக்கூடிய செயல். இதற்கென நீங்கள் தனிப்பட்ட அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் அணுக கூடிய அளவிற்கு சிங்கப்பூர் அரசு மிக எளிமையாக இந்த விண்ணப்பத்தை வடிவமைத்துள்ளது.

நீங்கள் முதலில் www.singpass.gov.sg என்ற இணையதளத்திற்கு செல்லவும். அங்கே ரெஜிஸ்டர் பட்டனை தேர்வு செய்யவும். தேர்வு செய்தவுடன் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அங்குள்ள விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். அடுத்தது உங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்ய அனுமதிக்கவும். ஸ்கேன் செய்த பிறகு, நீங்கள் உங்களுக்கு விரும்பும் பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளலாம் அடுத்தது உங்களுடைய தொலைபேசி எண்ணை பூர்த்தி செய்யவும். இங்கே உங்களுடைய தொலைபேசி எண் முக்கிய அடையாளமாக கருதப்படும். ஒருவரை தொலைபேசி எண்ணை கொடுத்த பிறகு அதற்கு OTP வரும். அந்த OTP எண்ணை கொடுத்து சரிபார்ப்பு செய்ய வேண்டும். உங்களுடைய OTP சரியாக அமைந்த பின் உங்களுடைய லாகின் ஐடி உருவாகி உங்களுக்கு NRIC நம்பர் கிடைக்க பெறும்.

நீங்கள் PIN mailer மூலம் சிங் பாசை விண்ணப்பிக்க போகிறீர்கள் என்றால், அதே போல் www.singpass.gov.sg என்ற இணையதளத்திற்கு செல்லவும். மேல் சொன்ன அதே வழிமுறைகளை பின்பற்றி உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கொடுக்கவும் அதாவது விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த பின் இங்கே உங்களுடைய முகம் சரிபார்ப்பு இருக்காது. அதற்கு பதில் உங்களுடைய தொலைபேசி எண்ணும் மற்றும் குடியிருப்பு முகவரியையும் பதிவிட சொல்லும். பதிவிட்ட பின் உங்களுடைய தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் OTP அனுப்பப்படும். அந்த OTP சரிபார்த்த பின் உங்களுடைய ஐடி உருவாக்கி விடும். மேற்கண்ட இரண்டு வழிகளிலும் நீங்கள் சிங் பாசை விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு அரசு இணையதளத்தை அணுகவும்.

இதுவரை எப்படி விண்ணப்பிப்பது எந்தெந்த வழிகளில் விண்ணப்பிப்பது என்று பார்த்தோம். இப்பொழுது நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களில் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும். என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் எவை மாற்றங்கள் செய்ய முடியாதவை என்பதை பார்க்கலாம்.

உங்களுடைய PIN mailer -ஐ தவறாக நம்பர் இடம் பெற்றிருந்தால் அல்லது உங்களுக்கு NRIC நம்பர் கிடைக்கவில்லை எனில் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டு பயனாளர்கள் osu@assurity.sg என்ற என்ற மெயில் ஐடிக்கு அஞ்சல் அனுப்பவும். அங்குள்ள உதவி மைய அதிகாரி உங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். நீங்கள் உள்ளூர் பயனாளர்கள் என்றால் 78111 என்ற எண்ணிற்கு Resend pin mailerNRICPostal Code இந்த ஃபார்மட்டில் குறுஞ்செய்தி அனுப்பவும். எல்லாம் சரிபார்த்த பிறகு குறைந்தபட்சம் ஏழு நாளைக்குள் உங்களுக்கான லாகின் ஐடி கொடுக்கப்படும்.

தற்போது உங்களுடைய தொலைபேசி எண்ணை மாற்றும் செய்ய வேண்டுமெனில், நீங்கள் உங்கள் SingPass கணக்கில் உள் நுழைந்து Update Account Details என்னும் இணைப்பை தேர்வு செய்யவும். அதன் மூலம் உங்களுடைய தொலைபேசி எண்ணை மாற்றலாம். உங்களிடத்தில் பேசுகிறேன் மாற்றுவதற்கு முன் உதவி மைய அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார். அவருடைய வழிகாட்டுதலின்படி நீங்கள் அடுத்தடுத்த காரியங்களை செய்து உங்களுக்கு தேவையான தொலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ளலாம்.

உங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று இன்னும் சந்தேகங்கள் இருந்தால் அல்லது தெரியவில்லை என்றால் நீங்கள் நேரடியாக சென்று இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். நேரில் செல்லும்போது உங்களுடைய அடையாளங்களை (NRIC or FIN) கொண்டு செல்லவும்.

இந்த சிங் பாஸ் (singpass) திட்டத்தின் மூலம் பயனாளர்கள், நிறுவனத்தினர் என அனைவரும் பயன் அடையலாம். பயனாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் அடையாளங்களை பாதுகாக்கவும் அவர்களுடைய தினசரி வேலைகளை சரிவர செய்யவும் இது உதவுகிறது. அதேபோன்று நிறுவனத்தினர்களுக்கு தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றியும் தங்களுடன் இருக்கும் சக நிறுவனத்தின் தகவல்கள் பற்றியும் தெரிந்து கொள்ள இது உதவும். எனவே அனைவரும் சிங் பாஸ் பெற்று தங்களுடைய வேலைகளை சுலபமாகி கொள்ளலாம்.

Related posts