TamilSaaga

“சிங்கை ஸ்டைலில்” மலேசியாவில் பெட்ரோல் போட்ட சிங்கப்பூரர்.. என்ன பண்றது விலைவாசி அப்படி இருக்கு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நேற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் சிங்கப்பூர் மலேசிய எல்லைகள் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல லட்சம் மக்கள் இருநாட்டு எல்லையை தற்போது சிரமமின்றி கடந்து வருகின்றனர். இது ஒருபுரம் இருக்க சிங்கப்பூரில் தற்போது நிலவும் அதிக எரிபொருள் விலை காரணமாக சிங்கப்பூரர் ஒருவர் அதிபுத்திசாலித்தனமாக யோசித்து ஒரு செயலை செய்துள்ளார்.

“நூலிழையில் என் மனைவி உயிர்பிழைத்தார்.. சிங்கப்பூர் AMK Hubல் இடிந்து விழுந்த கூரை” : பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாக கணவர் குற்றச்சாட்டு!

Aurizn என்ற முகநூல் பதிவில் வெளியான ஒரு புகைப்படம் தான் இப்பொது மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வைரலாகி வருகின்றது. சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த ஒருவர் Johor Bahru சென்று எரிபொருளை நிறைப்பியுள்ளார். அதுவும் அவர் எரிபொருள் நிரப்பிய அந்த “சிங்கப்பூர் ஸ்டைல்” தான் இன்னும் சுவாரசியமாக உள்ளது.

காரில் “எரிபொருள் நிரப்பும் துவாரம்” உள்ள பகுதிக்கு கீழ் உள்ள பகுதியில், Jack போட்டு காரை சாய்வாக மேலேற்றி அந்த நபர் எரிபொருள் நிரப்பியுள்ளார். அப்படி செய்தால் காரின் எரிபொருள் டேங்க் இடைவெளி இல்லாமல் முழுமையாக நிரம்பும் என்பது இங்குள்ள நம்பிக்கை (உண்மையும் அதுதான்). சில எரிபொருள் நிலையங்களில் இதற்கென்று சாய்வு பலகைகள் வைப்பதுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேங்க் முழுமையாக நிரம்புவது ஒருபுறம் இருக்க சிங்கப்பூரில் மலிவான மற்றும் மிகவும் பொதுவான 95-ஆக்டேன் பெட்ரோலின் 1 லிட்டரின் விலை ஏப்ரல் 1, 2022 நிலவரப்படி S$3.05 ஆக உள்ளது. கிரெடிட் கார்டு தள்ளுபடிகள் போக சிங்கப்பூரில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு S$2.29 செலவாகும். ஆனால் மலேசியாவில், மிகவும் பொதுவான 95-ஆக்டேன் பெட்ரோல் RM2.05 (S$0.66) விலைக்கு விற்கப்படுகிறது. இது பொதுவாக அந்நாட்டு அரசால் மலேசியர்களுக்கு மட்டும் மலேசிய அரசால் வழங்கப்படும் மானிய விலை.

மற்றவர்களுக்கு 97-ஆக்டேன் பெட்ரோலுக்கு, 1 லிட்டர் RM3.91 (S$1.26) விறக்கப்படுகிறது, இந்நிலையில் சிங்கப்பூரில் ஒரு முழு 40-லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது S$92 ஆக உள்ள நிலையில் மலேசியாவில் அதே 40 லிட்டருக்கு S$50 தான் செலவாகும். ஆகையால் தான் சிங்கப்பூர் ஓட்டுநர்கள் Johor பகுதியில் இருக்கும் போது தங்கள் எரிபொருள் டேங்க்-களை முழுவதுமாக நிரப்ப காரணமாக உள்ளது.

19 வயதில் கர்ப்பம்.. வெளியே அனுப்பிய பெற்றோர்.. அப்பா இல்லாத பிள்ளையாக வளரும் குழந்தை – சிங்கப்பூரில் தவிக்கும் இளம் பெண் “சோஃபி”

முன்பெல்லாம் அதிக எரிபொருளை டேங்க்கில் ஏற்ற காரை முன்னும் பின்னுமாக அசைப்பது போன்ற பழக்கம் தற்போது வழக்கொழிந்துவிட்டாலும் அவை இந்த Jack போன்ற வடிவில் தொடர்கின்றன என்று தான் கூறவேண்டும். ஆனால் இப்படி செய்வதால் எரிபொருள் வெளியே சிந்த வாய்ப்புகள் உள்ளது, மேலும் எரிபொருள் விரிவடையும் தன்மை உள்ளதால் இது பாதுகாப்பானதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

எவ்வாறாயினும் சிங்கப்பூரர்களை மலேசியாவிற்கு மீண்டும் வரவேற்பதும், அங்கு பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் அந்த புகைப்படத்திற்கு பதிலளித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts