TamilSaaga

சிங்கப்பூருக்கு வொர்க் பெர்மிட் வந்துட்டா? ஏஜெண்ட் உங்களிடம் காட்டிய விசா போலியா? எப்படி கண்டுபிடிக்கலாம்? இப்படி Clarify பண்ணிக்கோங்க

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கும் ஊழியர்கள் பாடாதப்பாடு பட்டு லட்சத்தில் காசை கட்டி வாங்கிய IPA விசாவிலும் தற்போதைய சூழலில் தில்லுமுல்லு நடந்து வருகிறது. இதனை நம்மிடம் காசு வாங்கிய ஏஜென்ட்களே செய்து வருகிறார்கள்.

சிங்கப்பூருக்கு வர நீங்கள் கொண்டிருந்த ஆசையும் அதன் முதல் படியும் தான் விசா. அதை வாங்க நீங்க செல்லும் ஏஜென்ட் உங்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து விடாதீர்கள். அவர் சரியாக இருந்தாலே உங்களுக்கு எந்தவித பிரச்னையும் இருக்காது. அடுத்ததாக உங்கள் கையில் இருக்கும் விசா உண்மைத்தன்மையை எப்படி கண்டுபிடிக்கலாம்.

விசா கிடைத்ததும் முதலில் பிரிண்ட் போட்டுக்கொள்ளுங்கள். மொத்தம் 12க்கும் அதிகமான பக்கங்கள் இருக்கும். அதில் சிங்கப்பூர் நாட்டின் விதிகள், உங்கள் கம்பெனி குறித்தும் சம்பளம் குறித்தும் தெளிவாக போடப்பட்டு இருக்கும். ஒரு எழுத்தைக் கூட விடாமல் படித்து விடுவது நல்லது.

IPA எடிட் செய்யப்படும் டாக்குமெண்ட் தான் என்பதால் அதில் பெயர் மற்றும் மற்ற தகவல்களை மாற்றி போலி வொர்க் பெர்மிட் தயார் செய்து விடுகின்றனர். இதனை வைத்து காசை லட்சத்தில் ஏமாற்றுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இதனை எப்படி கண்டுப்பிடிக்கலாம்? குகூளில் சென்று mom.gov.sg என டைப் பண்ணி சர்ச் கொடுங்க. இதில் கீழே eServices என்பதை க்ளிக் செய்தால் இன்னொரு பக்கம் திறக்கும். அதில் Application status via work permit one என இருக்கும். அதனை க்ளிக் செய்தால் இன்னொரு பக்கம் திறக்கும்.

அதில், i agree என்பதை கொடுத்துவிட்டு உள்ளே செல்லுங்கள். enquiry என இருக்கும் ஐகானை க்ளிக் செய்யுங்கள். அதில் foreign worker details என்பதை ஓகே செய்யுங்கள். அதில் NRIC No, Passport no மற்றும் பெயரை எண்ட்ரி செய்யுங்கள்.

next க்ளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு போகும் அதில் உங்க IPA நம்பரை எண்டர் செய்யுங்கள். அதிலேயே உங்கள் IPA அப்ரூவ் என வந்தால் உங்களிடம் இருப்பது உண்மையான விசா தான். Record not found என வந்தால் ஏஜென்ட் ஏதோ சித்து வேலை செய்திருக்கிறார். அவரிடம் உடனே இதை பற்றி கேளுங்கள். எப்போதுமே IPA வந்தவுடன் இந்த வழியில் சரியானது தானா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts