TamilSaaga

சிங்கப்பூரில் நெருங்கும் டூரியன் சீசன் – அதிக தேவைக்கு தயாராகும் விற்பனையாளர்கள்

சிங்கப்பூரில் தற்போது டூரியன் சீசன் தொடங்கி வருவதால், இந்த பழங்களை விற்பவர்கள் இந்த பழங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக டூரியன் சீசன் உச்ச காலகட்டத்தில் இருக்கும் காலத்தில் இந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதுகின்றனர். டூரியன் சீசன் எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய ஆண்டுகளில் இருந்ததைப் போலவே இந்த ஆண்டும் விற்பனை அதிக அளவில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விற்பனை உச்சக் காலத்தில் இருக்கும்போது டூரியன் பழங்களின் விளையும் கணிசமாக குறையும் என்று வியாபாரிகள் பிரபல சி.என்.ஏ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லூயிஸ் டூரியன் நிறுவனத்தின் பங்குதாரரான திரு லூயிஸ் லீ, இதுகுறித்து கூறும்போது “இந்த பருவத்தில் டூரியன் விற்பனை நல்லபடியாக உள்ளது. மலேசிய விற்பனையாளர்கள் சீனாவிற்கு இந்த பழங்களை ஏற்றுமதி செய்வதால் இவ்வாண்டு இந்த பழங்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகின்றது” என்று கூறினார்.

தற்போது, ​​அவர் ஒரு நாளைக்கு சுமார் 1,500 கிலோ டூரியன்களை விற்கிறார், ஆனால் உச்ச காலத்தில் இதை 2,500 கிலோவாக உயரும் என்று அவர் நம்புகிறார். பஹாங்கிலிருந்து வரும் முசாங் கிங் அல்லது மாவோ ஷான் வாங் ஆகிய வகை டூரியன் பழங்கள் அவரிடம் சிறந்த அளவில் விற்பனையாகும் பழங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் முசாங் கிங்கை ஒரு கிலோவுக்கு S $ 21க்கு விற்கிறார், ஆனால் ஒரு வாரத்தில் விலை S $ 17 அல்லது S $ 18 ஆக குறையும் என்று நம்புகிறார்.

Related posts