சிங்கப்பூரில் நைஜீரிய நாட்டை சேர்ந்த மோசடி செய்பவர்களுக்கு சிங்கப்பூரில் இருந்து 2 மில்லியன் டாலர்களுக்கு மேல் செல்ல உதவிய பெண்க்கு இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 2) ஏழு ஆண்டுகள் மற்றும் நான்கு வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோஹைசா ஆலாப் என்ற 46 வயதுடைய அந்த பெண்மணி, கமிஷனுக்குப் பதிலாக நைஜீரிய மோசடி செய்பவர்களுக்கு தனது வங்கிக் கணக்குகளை கையாள அனுமதி அழுதுள்ளார்.
மோசடி காரியங்களுக்கு தனது வங்கிக் கணக்குகளை மற்றவர்களுக்கு வழங்கியது உள்பட 8 வழக்குகளில் அவர் மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இன்று திங்களன்று காவல்துறை மற்றும் அட்டர்னி-ஜெனரல் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், ரொஹைசா என்ற அந்த பெண்மணி ஒரு மோசடி கும்பலுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இந்த செயலை செய்வதற்காக அந்த பெண்மணி மொத்தம் 25 வங்கிக் கணக்குகளை அந்த கும்பலுக்கு வழங்கியுள்ளார். அவர்கள் அதன் மூலம் சுமார் 1.35 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளனர். மொத்தத்தில், மோசடி செய்பவர்கள் சிங்கப்பூரிலிருந்து 2 மில்லியன் டாலருக்கு மேல் எடுத்துச்செல்ல அந்த பெண்மணி உதவியுள்ளார்.
தற்போது இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. மோசடிக்கு உதவிய குற்றத்திற்காக அந்த பெண்மணிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதது.