TamilSaaga

“பணத்தை திரும்பத்தர முடியாது, வெளிய போங்க” : சிங்கப்பூரில் பெண்ணிடம் அழிச்சாட்டியம் செய்த ஹவுஸ் Owner – போலீஸ் வந்ததும் “கப்சிப்”

சிங்கப்பூர் Hougang பகுதியில் உள்ள ஒரு வாடகை அறைக்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே ஒரு மலேசியப் பெண்ணும் அவரது காதலனும் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அவர்களது வீட்டு உரிமையாளரால் கூறப்பட்டதாகக் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஜோடி கடந்த ஜனவரி 25 அன்று இரவு ஹூகாங் அவென்யூ 8ல் உள்ள பிளாக் 620ல் ஒரு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் அடுத்த நாள் அதாவது ஜனவரி 26 அன்று மதியம் அவர்கள் அந்த வீட்டின் உரிமையாளரால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டது உண்மையா? : கடுப்பான சிங்கப்பூர் போலீஸ் – உண்மையில் நடந்தது என்ன?

வெளியான அந்த வீடியோ அடிப்படையில், S$550 வைப்புத்தொகையை (Deposit) உள்ளிட்ட அந்தத் தம்பதியினர் அறைக்காகச் செலுத்திய S$800ஐத் திருப்பித் தர வீட்டு உரிமையாளர் முதலில் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த வீட்டு உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அந்த பெண் அழுவதை காணொளியில் காணமுடிந்தது. அதன்பிறகு, அந்த பெண்ணின் அம்மாவும் அவரது சகோதரியும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து, அந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, நில உரிமையாளர் அந்த பெண்ணுக்கு S$700 திருப்பிக்கொடுத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் 10,000 முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவிற்கு, பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவர்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். அந்த பெண்ணின் கூற்றுப்படி, ஜனவரி 26 அன்று மாலை 5 மணிக்கு தனது காதலன் மற்றும் அவரை இந்த வீட்டு உரிமையாளருக்கு அறிமுகப்படுத்திய நண்பர் ஒருவரிடமிருந்து முதலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்திகளில் வீட்டு உரிமையாளர் அந்த பெண்ணையும் அவரது காதலனின் உடைமைகளையும் தூக்கி வெளியே எறிய விரும்புவதாகக் கூறப்பட்டது.

அந்தப் பெண்ணின் காதலனும் தான் வேலையில் இருந்தபோது வீட்டு உரிமையாளரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார். அந்தத் தம்பதியர் அந்த நாள் இறுதிக்குள் வெளியே செல்லவில்லை என்றால் அவர்களது உடைமைகளை தூக்கி வெளியே எறிந்து விடுவதாக உரிமையாளர் அவரிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் காதலன் அவர்கள் வெளியே செல்ல சில நாட்கள் அவகாசம் தருமாறு கேட்க, அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாலை 5.30 மணியளவில் அந்த பெண் வீட்டிற்கு திரும்பியபோது, ​​தனது அனுமதியின்றி தனது உடைமைகளை தனது அறையில் இருந்து வெளியே எடுத்துப்போடப்பட்டதாக அவர் கூறினார். பின்னர் அது குறித்து வீட்டு உரிமையாளரை சந்தித்து கேட்டபோது, நீங்கள் போதைப்பொருளை வைத்திருந்தால் எனக்கு தான் பிரச்சனை நான் தான் மரண தண்டனையை எதிர்கொள்வேண் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக வீட்டு உரிமையாளர் பலமுறை கூறியுள்ளார். வீட்டு உரிமையாளர் அவர்கள் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டி, மேலும் அனுமதியின்றி அவர்களின் உடைமைகளைத் தொட்டதை அறிந்த அவரது காதலன் இறுதியில் காவல்துறையை அழைத்தார்.

சிங்கப்பூரில் உயிரிழந்த மூதாட்டி : “நான்காவது டோஸ் தடுப்பூசி தான் காரணமா?” – பிரேத பரிசோதனை சொல்வதென்ன?

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம் என வீட்டு உரிமையாளரை எச்சரித்தனர். அதன்பிறகு, தம்பதியினர் தங்களுடைய முந்தைய இல்லத்திற்குத் திரும்பி அங்கே தங்களது இரவைக் கழித்தனர். இறுதிவரை நில உரிமையாளர் தம்பதிகளை முதலில் வெளியேறச் சொன்னதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை பகிர்கிறேன் என்று அந்த பெண் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts