TamilSaaga

சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில்.. மகன் கையில் bracelet போட்டு அழகு பார்த்த தமிழக ஊழியர் – திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கிய போது காத்திருந்த ஏமாற்றம்!

சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவர் ஜெயக்குமார். இவரது குடும்பத்தினர் நேற்று (Aug.5) மாலை 5.30 மணிக்கு சிங்கையில் இருந்து திருச்சி கிளம்பிச் சென்றனர். அவரது மனைவி மற்றும் மகனை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஊழியர் ஜெயக்குமார் அனுப்பிவைத்தார்.

அப்போது தனது மகனின் கையில் 8 கிராம் மதிப்புள்ள bracelet ஒன்றை அணிவித்திருக்கிறார். சிங்கப்பூரில் விமானம் ஏறும் வரை கையில் bracelet இருந்திருக்கிறது. ஆனால், திருச்சி சென்று இறங்கிய பிறகு, எதேச்சையாக கையை பார்த்த பொழுது, bracelet காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.

முடிந்த வரை திருச்சி விமான நிலையத்தில் அவர்கள் பயன்படுத்திய பாதைகளில் தேடிப்பார்த்தும் bracelet கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகும் கூட, மகனின் கையில் bracelet இருப்பதை அவரது மனைவி பார்த்திருக்கிறார்.

மேலும் படிக்க – உழைத்து, உழைத்து… 33 வயதில் கிடைத்த ஒரு பொக்கிஷ வாழ்க்கையை.. தன் கீழ்த்தரமான புத்தியால் இழந்த சிங்கப்பூரர் – ஒரு நொடியில் பேர், புகழ் அத்தனையும் காலி!

ஆனால், ஏர்போர்ட்டில் இறங்கி Immigration எல்லாம் முடித்த பிறகு கையை பார்த்த பொழுது bracelet காணவில்லை. அவர்கள் பயணித்த விமானத்தில், சிங்கப்பூரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த பலர் உடன் பயணித்தனர். அந்த bracelet விமானத்தில் இறங்கும் போது விழுந்திருக்கலாம் என்பதே யூகமாக உள்ளது.

இத்தனை விவரங்களையும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர் ஜெயக்குமார், நமது “தமிழ் சாகா சிங்கப்பூர்” தளத்திற்கு அனுப்பி, கண்டுபிடித்துத் தருமாறு உதவி கோரியுள்ளார்.

| விமானத்தில் பயணித்த சக பயணிகள் யாருக்காவது அந்த bracelet குறித்த விவரம் தெரிந்தால், ஊழியர் ஜெயக்குமாரின் +65-96440682 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இல்லையெனில், தமிழ் சாகாவின் வாட்ஸ் அப் நம்பரான +91 8269 418 418 என்ற எண்ணுக்கும் தகவல் கொடுக்கலாம். |

காணாமல் போன bracelet குறித்து தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் ஊழியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts