TamilSaaga

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு பெண் ஊழியர்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் – அமைச்சர் டான் விளக்கம்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் அவர்களுக்கான சட்ட ரீதியிலான பாதுகாப்பு பற்றியுமான விழிப்புணர்வு ஏற்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு தனது எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்துள்ளார் சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான்.

சிங்கப்பூருக்கு வந்து பணி செய்யும் அயல்நாட்டு பெண் ஊழியர்கள் மற்றும் இல்ல பணிப்பெண்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமை மற்றும் சட்டத்தின் வாயிலாக எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றி தெரியும். அவர்களுக்கு அதுகுறித்து அனைத்தும் கற்றுத்தரப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி SIP எனப்படும் வகுப்புகள் மூலம் அவர்களது தாய் மொழியின் வாயிலாகவே சொல்லி தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தங்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பங்கம ஏற்பட்டல் எப்படி உதவி பெறுவது, யாரிடம் உதவிக்கு அணுகுவது எனபது பற்றி சொல்லித்தரப்பட்டுள்ளது.

அவர்கள் உதவியை பெற அவசர உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கும் விடுதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல் மனிதவள அமைச்சகமானது சில அமைப்புகளுடன் இணைந்து பாதிப்புக்கு உள்ளாகும் வெளிநாட்டு பெண் ஊழியர்களுக்கு உதவிகளை செய்து வருவதாகவும் அமைச்சர் டான் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Related posts