TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிம்மதி தரும் செய்தி.. அரசு முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூரில் கோவிட்-19-லிருந்து மீண்ட பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பணிக்கு அல்லது பள்ளிக்கு திரும்புவதற்கு முன் அவர்கள் குணமடைந்துவிட்டதாகச் சான்றளிக்க கடிதமோ மெமோவோ கொடுக்க தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த மெமோக்கள் அல்லது கடிதங்களை பெறுவதற்காக, அறிகுறிகளே இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் கொண்ட நபர்கள் பொது மருத்துவர்களை (GPs) அணுகுவது தொடர்ந்து அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், “இந்த கடிதங்கள் அவசியமில்லை, இப்படி பல பேர் வருவது மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்” என்று கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதவள அமைச்சகங்கள் மற்றும் ஆரம்ப குழந்தை பருவ மேம்பாட்டு நிறுவனம் சனிக்கிழமை (பிப் 5) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க – “பணத்தை திரும்பத்தர முடியாது, வெளிய போங்க” : சிங்கப்பூரில் பெண்ணிடம் அழிச்சாட்டியம் செய்த ஹவுஸ் Owner – போலீஸ் வந்ததும் “கப்சிப்”

இந்த வருகைகள் “உண்மையாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை வழங்குவதை கேள்விக்குறியாக்கிவிடும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு (உயர்கல்வி நிறுவனங்கள் உட்பட) மருத்துவர்களிடமிருந்து கடிதம் அல்லது மெமோ பெறத் தேவையில்லை.” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போதைய சுகாதார நெறிமுறைகள் படி, ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் (ART) மூலம் கோவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்தவர்கள், குறைந்தது 72 மணிநேரம் சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் நலமாக இருந்தால், சாதாரண செயல்பாடுகளைத் தொடர தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறலாம்.

அரசின் இந்த அறிக்கையில், கொரோனாவில் இருந்து மீண்டு திரும்பும் ஊழியர்களிடம் நிறுவனங்கள் கடிதங்களோ அல்லது மெமோக்களோ கேட்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

“அதேபோல், கோவிட்-19 நோயால் பாதிக்கப்படும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், அல்லது stay-home notice பெற்றவர்கள் பள்ளிக்குத் திரும்புவதற்கு முன், தங்கள் மருத்துவர்களிடமிருந்து recovery memo பெற வேண்டியதில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 சோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்த ஊழியர்கள், தங்கள் முதலாளிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும், மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க பணியிடத்திற்குத் திரும்ப வேண்டாம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் உயிரிழந்த மூதாட்டி : “நான்காவது டோஸ் தடுப்பூசி தான் காரணமா?” – பிரேத பரிசோதனை சொல்வதென்ன?

ஆனால், நலமாக இருப்பவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

அவர்களால் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாவிட்டால், நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய sick leave-ஆக கருத வேண்டும். அதுமட்டுமின்றி, ஊழியர்களிடம் இருந்து மருத்துவ சான்றிதழையும் கேட்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Protocol 2 இல் இருக்கும் பணியாளர்கள் குறைந்தபட்சம் 72 மணிநேர தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தாமாகவே Antigen Rapid Test எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், சோதனை எதிர்மறையாக இருந்தால், மேலும் recovery memo அல்லது மருத்துவ மதிப்பீடு இல்லாமல் பணியிடத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகங்கள் மற்றும் ECDA தெரிவித்துள்ளன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts